பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த 31ம் தேதி வரை அவகாசம்

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதமின்றி செலுத்த, 31ம் தேதி வரை, தமிழக மின் வாரியம் அவகாசம் அளித்துள்ளது.தமிழகத்தில் நேற்று முதல், 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால், இந்த கால கட்டத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதம் இன்றி செலுத்த அவகாசம் அளிக்கும்படி, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
EB bill, EB, TNEB

சென்னை : ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதமின்றி செலுத்த, 31ம் தேதி வரை, தமிழக மின் வாரியம் அவகாசம் அளித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முதல், 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால், இந்த கால கட்டத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதம் இன்றி செலுத்த அவகாசம் அளிக்கும்படி, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, அபராதமின்றி கட்டணம் செலுத்த, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: தாழ்வழுத்த நுகர்வோர், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள், கடந்த, 10ம் தேதி முதல் வரும், 24ம் தேதி வரை இருக்கலாம். அத்தகையோர், மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி, மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், மின் நுகர்வோருக்கு வழங்கியுள்ள இணையதள வழி வாயிலாக, வலைதள மற்றும் கைபேசி வங்கியியல், 'பேமண்ட் கேட்வே, பாரத் பில் பே' போன்றவற்றின் வாயிலாகவும், பணம் செலுத்தலாம்.


latest tamil news



மே மாத கணக்கீட்டு தொகை விபரம், மின் நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், மின் நுகர்வோர்கள், இந்த விபரங்களை, 'www.tangedco.gov.in' என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram - Chennai,இந்தியா
11-மே-202115:03:19 IST Report Abuse
Sriram குட். மாத பில் தேவை . 2 மாத பில் தள்ளுபடி பண்ணனவும்
Rate this:
Cancel
11-மே-202114:50:29 IST Report Abuse
ஆரூர் ரங் மாறன் ஊரடங்கு முடியும்வரை கேபிள் டிவி கட்டணத்தை ரத்து செய்யலாமே .😉 குறைந்தபட்சம் சன் டிவி சானல்களுக்கு?
Rate this:
Cancel
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. மாதாந்திர பில் என்னாச்சு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X