பில்கேட்ஸ் விவாகரத்து ஏன்? பரபரப்பு தகவல்

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
நியூயார்க்: பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்றவரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், 'மைக்ரோசாப்ட்' அதிபர் பில் கேட்ஸ் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால், அவரது மண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக, அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.மைக்ரோசாப்ட்' நிறுவனர்களில் ஒருவரும், உலக பணக்காரர்களில் நான்காம் இடம் வகிப்பவருமான பில் கேட்ஸ்,

நியூயார்க்: பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்றவரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், 'மைக்ரோசாப்ட்' அதிபர் பில் கேட்ஸ் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால், அவரது மண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக, அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.latest tamil newsமைக்ரோசாப்ட்' நிறுவனர்களில் ஒருவரும், உலக பணக்காரர்களில் நான்காம் இடம் வகிப்பவருமான பில் கேட்ஸ், 65, மிலிண்டா கேட்ஸ், 56, தம்பதி, விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். இதன் வாயிலாக அவர்களது 27 ஆண்டு கால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த விவாகரத்து முடிவு குறித்து அமெரிக்காவில் வெளியாகும், 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதன் விபரம்:பாலியல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற, மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டெய்னுடன், 2013 முதல், பில் கேட்ஸ் தொடர்பில் இருந்துள்ளார்.

நியூயார்க் நகரில் ஜெப்ரிக்கு சொந்தமான வீட்டில், பலமுறை அவரை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.இந்த நட்பில் மிலிண்டா கேட்சுக்கு அதிருப்தி இருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.பில் கேட்ஸ் தன் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவது தொடர்பாக ஜெப்ரி எப்ஸ்டெயினை அடிக்கடி சந்தித்து வந்ததாக, அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விவகாரத்து குறித்து பில் கேட்ஸ் - மிலிண்டா இடையே, 2019 முதலே பேச்சு நடந்து வருகிறது. தங்கள் மண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக, 2019ம் ஆண்டே, தன் வழக்கறிஞரிடம் மிலிண்டா தெரிவித்துள்ளார்.


latest tamil newsகடந்த ஆண்டு விவாகரத்து செய்ய முடிவெடுத்து, சொத்துக்களை பிரித்துக் கொள்வது குறித்து, சட்ட ரீதியான பணிகளை துவக்கிவிட்டனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன், 66, அமெரிக்காவில் நிதி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்தார். பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றார். மேலும், சிறுமியரை வைத்து மிகப் பெரிய பாலியல், 'நெட்வொர்க்' நடத்தி வந்த வழக்கில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2019 ஆகஸ்டில், அவர் சிறையில் உயிரிழந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202115:24:49 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) இது ஒரு நாடகமா ???
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-மே-202119:11:22 IST Report Abuse
Endrum Indian இவர்கள் சொத்து பல பில்லியன் டாலர் அதற்கு இவர்கள் கட்டவேண்டிய வரியும் பல பில்லியன் டாலர் விவகாரத்து செய்து கொண்டு சொத்தை பிரித்துக்கொண்டால் வரி அவ்வளவு இல்லையாம் அதற்காகத்தான் விவாகரத்து என்று
Rate this:
Cancel
Aravin Dan - Coimbatore,இந்தியா
11-மே-202116:13:22 IST Report Abuse
Aravin Dan பெண்களுக்கு நிறைய வருமானம் இருந்தால் அடுத்தது, கணவனை மதிக்கமாட்டார்கள். பிறகு விவாகரத்து தான். மேலை நாடுகளில் விவாகரத்து அதிகமாக இருப்பதின் காரணம் பெண்கள் பணத்திற்காக ஆணைச்சாராமல் இருப்பதுதான். இது ஒருபிற்போக்கான எண்ணம் போல் தோன்றினாலும், உண்மை இதுதான். ஒரு கட்டத்தில் பில் கேட்ஸ் தனது பிள்ளைகளுக்கு தனது சொத்தான 130 பில்லியன் டாலரிலிருந்து வெறும் பத்து மில்லியன் டாலர் மட்டுமே கொடுப்பதாக முடிவெடுத்தார்.அதே பத்து மில்லியன் டாலர் வாங்கிக்கொண்டு விவாகரத்து செய்ய அவரது மனைவி ஒத்துக்கொள்வாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X