ஆக்சிஜன் தடைபட்டதால் திருப்பதியில் 11 நோயாளிகள் பலி

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் 'சப்ளை' தடைபட்டதால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங். ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின் திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tirupati, OxygenSupply,Reduction, Patient, Died, நோயாளிகள், மரணம், பலி, ஆக்சிஜன், திருப்பதி

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் 'சப்ளை' தடைபட்டதால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங். ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தின் திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 5 தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. அதில்135 நோயாளிகள் வரை வென்ட்டிலேட்டர் வாயிலாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 7:30 மணியளவில் வென்ட்டிலேட்டருக்கு வரவேண்டிய ஆக்சிஜன் 'சப்ளை' திடீரென தடைபட்டது. இதனால் ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில் 11 நோயாளிகள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.


latest tamil news


இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகளின் உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆக்சிஜன் சப்ளை குறைய துவங்கியவுடன் ஊழியர்கள் அதை கவனித்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் அதை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 'கம்ப்ரசர்' அளவு குறைந்ததால் ஆக்சிஜன் சப்ளை தடைபட்டது. மற்றபடி ஆக்சிஜன் சப்ளை முற்றிலுமாக நிற்கவில்லை. இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 13க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மே-202100:48:16 IST Report Abuse
அஜித் தோவல் இது போன்ற சம்பவம் உ.பி-யில் நடந்த போது அந்த அரசை சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கானோர் கண்டனம் செய்தனர். அவர்களெல்லாம் இப்பொழுது எங்கே?
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-மே-202116:36:00 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஆஸ்பத்திரியை நொறுக்கி மற்ற நோயாளிகள் இறப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
11-மே-202111:23:30 IST Report Abuse
ganapati sb ஆக்சிஜென் இருந்தும் கருவிகளின் செயல்பாட்டில் கோளாறு வந்து இதை போல விபத்துகள் மருத்துவமனைகளில் அங்கங்கே நிகழ்வது ஏதேனும் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களின் திட்டமிட்ட சதியோ என என்ன தோன்றுகிறது அரசு இதை கண்காணித்து ஆவண செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X