அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? 'டோக்கன்' வழங்கும் தி.மு.க.,வினர்!

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
கரூர்: ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் கொரோனா நிவாரணத்திற்குரிய டோக்கன்களை, கரூரில், தி.மு.க.,வினர் வழங்கி வருகின்றனர்.கடந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. பல இடங்களில், வீடு வீடாக சென்று அ.தி.மு.க.,வினரே டோக்கன் வழங்கினர்.பொங்கல் பரிசுஅப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 'தமிழகம் முழுதும்,
டோக்கன், தி.மு.க.,, D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்

கரூர்: ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் கொரோனா நிவாரணத்திற்குரிய டோக்கன்களை, கரூரில், தி.மு.க.,வினர் வழங்கி வருகின்றனர்.

கடந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. பல இடங்களில், வீடு வீடாக சென்று அ.தி.மு.க.,வினரே டோக்கன் வழங்கினர்.


பொங்கல் பரிசு



அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 'தமிழகம் முழுதும், அ.தி.மு.க.,வினரை வைத்து, பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.'பொங்கல் பரிசு, அரசு கஜானாவில் இருந்து வருகிறது என்பதை, முதல்வர் உணர வேண்டும்.எனவே, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே வழங்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.


latest tamil news




தற்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணம் முதல் தவணை, 2,000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன்கள், நேற்று முதல் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் ரேஷன் ஊழியர்களுடன், தி.மு.க.,வினர் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். சமூக வலைதளம்பயனாளிகள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் டோக்கன் வாங்கி சென்றனர்.

இது மட்டுமல்லாது, டோக்கன் வழங்கிய நிகழ்வுகளை சமூக வலைதளங்களில், தி.மு.க.,வினர் பதிவிட்டு வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன் வரை, அ.தி.மு.க., அரசை குற்றம் சாட்டிய, தி.மு.க.,வினர், அதே விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். ஊருக்கு தான் உபதேசம் போலும்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sri - mumbai,இந்தியா
11-மே-202119:26:19 IST Report Abuse
sri காமராஜர் அன்று கூறியது : ஒரே குட்டையில் ஊறிய மட்டை இன்று தி மு க வுடன் கைகோத்துக்கொண்டு இருக்கும் காங்கிரசுக்கு இதெல்லாம் நினைவுக்கு வராது.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-மே-202119:24:28 IST Report Abuse
sridhar திமுக நல்லவங்க என்று உங்களுக்கு யார் சொன்னது . நீங்களா ஏதோ கற்பனை பண்ணிநா அவங்க என்ன செய்ய முடியும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-மே-202118:52:17 IST Report Abuse
J.V. Iyer மாமியார் உடைத்தால் மண்கலம். மருமகள் உடைத்தால் பொன்கலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X