அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் முதல் சட்டசபை கூடியது; எம்எல்ஏ.,க்கள் பதவியேற்பு

Added : மே 11, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலாவது சட்டசபை கூட்டம் இன்று (மே 11) கூடியது. இதில், எம்எல்ஏ.,க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சமீபத்தில் நடந்துமுடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக கடந்த 7ம் தேதி
TNAssembly, Stalin, CM, MLA, தமிழகம், சட்டசபை, முதல்வர், ஸ்டாலின், எம்எல்ஏ, பதவியேற்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலாவது சட்டசபை கூட்டம் இன்று (மே 11) கூடியது. இதில், எம்எல்ஏ.,க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக கடந்த 7ம் தேதி கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான 16வது சட்டசபையின் முதலாவது கூட்டம் இன்று (மே 11) சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. இதில், தற்காலிக சபாநாயகராக திமுக.,வை சேர்ந்த கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil news



முதலில் முதல்வர் ஸ்டாலின், ‛முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனக்கூறி பதவி ஏற்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றார். அப்போது, ‛மக்கள் மனதில் இடம்பெற்று, தேர்தலில் வெற்றி வாகை சூடிய முதல்வர்,' என சபாநாயகர் பாராட்டு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் அகரவரிசைப்படி அனைத்து எம்எல்ஏ.,க்களும் பதவியேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் பதவியேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
11-மே-202121:56:10 IST Report Abuse
madhavan rajan ஸ்டாலினும் துரைமுருகனும் சமூக இடைவெளியில்லாமல் நிற்கிறார்கள். இவர்கள்மீது வழக்குப் போட போலீசுக்கு தைரியம் இருக்கா? இவர்கள் ஊரடங்கை மீறியதாக ஆகாதா?
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
11-மே-202118:16:03 IST Report Abuse
Arachi பத்து வருடம் செய்யாத செயல்பாடுகளை பத்தே நாளில் பல திட்டங்களை திட்டமிட்டு முனைப்புடன் செயல்பட்டு வரும் அரசை பாராட்டுகிறோம். சென்னை வாசி என்ற முறையில் மேயோராக ஸ்டாலின் இருக்கும்போதே இவரது கமிட்மென்ட் மிக சிறப்பாக இருப்பதை பார்க்க முடிந்தது. தமிழ் வாழும்.முந்தய அரசின் நல்ல செயல்பாடுகளை அழிக்கமுயலும் அற்பபுத்தி இவரிடம் இருக்காது. எந்த செயலும் மக்களின் வரிப்பணம் என்பதை உணர்ந்தாலே போதும்.இவர் உணர்ந்திருக்கிறார். மதுரவாயல் திட்டத்தை பாழடித்த பெருமை அதிமுக விற்கு உண்டு.பார்கும்போதல்லாம் வயறு எரிகிறது.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
11-மே-202117:03:40 IST Report Abuse
kosu moolai ஏய் இவரு அந்த துரை முருகன் இல்ல ? மூக்கு கிட்ட மச்சம் இல்லாததை கவனிக்கவே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X