பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் (மே 9) 3.66 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று (மே 10) 3.29 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தொடர்ந்து 2வது நாளாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 3,56,082 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 90 லட்சத்து 27
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் (மே 9) 3.66 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று (மே 10) 3.29 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தொடர்ந்து 2வது நாளாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3,56,082 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 90 லட்சத்து 27 ஆயிரத்தை தாண்டியது. ஒரேநாளில் 3,29,942 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 29 லட்சத்து 92 ஆயிரத்தை கடந்தது. 37.15 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,49,992 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 82.75 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 16.16 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (மே 10) ஒரே நாளில் 18,50,110 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 30 கோடியே 56 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (மே 11-ம் தேதி) காலை 10:30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 15 கோடியே 96 லட்சத்து 06 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 லட்சத்து 17 ஆயிரத்து 738 பேர் பலியாகினர். 13 கோடியே 72 லட்சத்து 97 ஆயிரத்து 983 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.G.RAMAN - MADURAI,இந்தியா
11-மே-202120:25:34 IST Report Abuse
N.G.RAMAN இந்த நிலை தொடரும். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது. கடந்த 7 ம் தேதி ஆயுர்வேத மற்றும் சித்த மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இப்போது அவை அதிகமாக பயன்படுத்தப்பட்ட மாநிலங்களில் கொராணா குறைந்து வருகிறது. இரண்டாவது உ பி மகாராஷ்டிரா டெல்லி பகுதிகளில் RSS தொண்டர்கள் முழு வீச்சுடன் மக்களுக்கு உதவி வருவதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்திலும் விடியட்டும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
Rate this:
Cancel
சுந்தர் சி, சென்னை நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்க முடியாதத மோடி, அமித்ஷா. மத்திய அரசை நம்பி பயன் இல்லாமல் மாநில அரசுகள் ஊரடங்கை அறிவிக்க வேண்டிய சூழல் வேறு எங்காவுது பார்த்தது உண்டா?
Rate this:
Thennarasu - Spencer,யூ.எஸ்.ஏ
11-மே-202120:27:59 IST Report Abuse
Thennarasuகடந்த முறை பிரதமர் ஊரடங்கு அறிவித்த போது எல்லா அரசியல் கட்சிகளும் அவரை குறை கூறியது. இப்போது பிரதமர் அந்த மாநிலத்தவரை முடிவு செய்ய சொன்னால் இப்போதும் பிரதமர் மேல் குறை. நீங்கள் எல்லாம் நல்ல வருவீங்க...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-மே-202116:40:34 IST Report Abuse
sankaseshan இந்த மாதிரி. நல்ல. நம்பிக்கை கொடுக்கும் செய்திகளை. போடுங்கள் எல்லாத்துக்கும் PM. ஐ. குறை. சொல்வதை. நிறுத்துங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X