மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தல்; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மத்திய படைகளின் பாதுகாப்பு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற 77 பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மத்திய படைன் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற 77 பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை வழங்கியுள்ளன. அந்த மாநிலத்தில் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறை

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற 77 பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மத்திய படைன் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.



latest tamil news



மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற 77 பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை வழங்கியுள்ளன. அந்த மாநிலத்தில் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்ற உயர்நிலைக் குழுவும் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இதையடுத்து அந்த மாநிலத்தில் அனைத்து பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,), மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எப்.,) மூலம் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


latest tamil news




அந்த மாநில எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுவேந்து அதிகாரிக்கு ஏற்கெனவே 'இசட்' பிரிவின் கீழ் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி 61 எம்.எல்.ஏ.,க்களுக்கு 'எக்ஸ்' பிரிவின் கீழும், அதற்கு அடுத்த உயர் பிரிவான 'ஒய்' பிரிவின் கீழ் 15 எம்.எல்.ஏ.,க்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arjun -  ( Posted via: Dinamalar Android App )
12-மே-202100:23:18 IST Report Abuse
arjun தேவையற்றது, வீன் செலவு
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-மே-202122:21:26 IST Report Abuse
Endrum Indian இது மேற்கு வங்காள தேசம்???அல்லது ஒர்ஸ்ட் பெங்கால் அல்லது வேஸ்ட் பெங்கால்
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
11-மே-202118:57:02 IST Report Abuse
Raja சொந்த மண்ணிலேயே உயிருக்கு பயப்படும் நிலையில் வாழ வேண்டியதிருக்கிறது. முன்பு காஷ்மீரில் இருந்தது. இப்போது மம்தா மண்ணில் இருக்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும்.சிஏஏ அமுல்படுத்தினால் மூர்க்க மார்கம் இதைவிட பெரிய அளவில் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. மம்தாவே தூண்டி விடுவார். ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X