சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி: அமெரிக்கா ஒப்புதல்

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த, அந்நாட்டு உணவு மற்றும் மருந்து கழகம் (எப்.டி.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்துகளை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் உலகிலேயே அதிகளவு
US, Younger Teens, CovidVaccine, FDA, Authorizes, Pfizer, BioNTech, அமெரிக்கா, சிறுவர்கள், கொரோனா, தடுப்பூசி, ஒப்புதல், எப்டிஏ, பைசர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த, அந்நாட்டு உணவு மற்றும் மருந்து கழகம் (எப்.டி.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்துகளை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் உலகிலேயே அதிகளவு பாதிப்புக்கு உள்ளான அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அந்நாடு, அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் தடுப்பூசிகள் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news


தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், 12 முதல் 15 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மே 13ம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
11-மே-202113:12:09 IST Report Abuse
chenar அந்த ஜீயரை நீங்களே நியமித்துக்கொள்ளலாம் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை அணைத்து சாதியினரும் அதில் பங்கேற்கலாம் என்று சொல்லி பாருங்களேன் இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்று சொல்பவர்கள் ஓடி ஒளிந்துகொள்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X