இந்தியாவுக்கு ரூ.110 கோடி நிதியுதவி: டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா தடுப்புப் பணிகளுக்காக டுவிட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ.110 கோடி (15 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனிடையே,

வாஷிங்டன்: கொரோனா தடுப்புப் பணிகளுக்காக டுவிட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ.110 கோடி (15 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.



latest tamil news


இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் இந்தியாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் இந்திய மக்களுக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.110 கோடி ஆகும்.


latest tamil news



இந்த தொகை 'கேர்' (CARE), 'எய்டு இந்தியா' (Aid India), 'சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா' (Sewa International USA) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் முறையே 10 மில்லியன் டாலர் (73.47 கோடி ரூபாய்), 2.5 மில்லியன் டாலர் (18.36 கோடி ரூபாய்), 2.5 மில்லியன் டாலர் (18.36 கோடி ரூபாய்) என, மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் பேட்ரிக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - nagercoil,இந்தியா
11-மே-202117:38:09 IST Report Abuse
suresh உங்க ஆப் க்கு ஆப்பு வச்சா தான் எங்களுக்கு நிதி கிடைச்ச மாதிரி
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
11-மே-202116:25:55 IST Report Abuse
ShivRam ShivShyam அறிவில்லா நம்ம மக்களும் கொண்டாடுவர்
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
11-மே-202116:30:54 IST Report Abuse
ShivRam ShivShyamஅந்த மூன்று நிறுவனுங்களும் மத மாற்றம் செய்பவை .. அதை வெளியிட இங்கே தடை .. அடப்பாவிங்களா...
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
11-மே-202117:39:15 IST Report Abuse
ShivRam ShivShyamநன்றி...
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-மே-202115:25:24 IST Report Abuse
sahayadhas வேண்டாம் வேண்டாம் கோரோன நிவாரணம் முழுவதும் இவனுங்க ஆட்டய போடுரானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X