பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்த அலைக்கு வாய்ப்பு: 'பிட்ச்' எச்சரிக்கை

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளது' என, 'பிட்ச் ரேட்டிங்' நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொருளாதார மதிப்பீடு தர நிர்ணயம் வழங்கும், 'பிட்ச்' ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மே 5-ம் தேதி நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் 9.4 சதவீதம் பேர் மட்டுமே

புதுடில்லி: 'இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளது' என, 'பிட்ச் ரேட்டிங்' நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news


பொருளாதார மதிப்பீடு தர நிர்ணயம் வழங்கும், 'பிட்ச்' ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மே 5-ம் தேதி நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் 9.4 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 9-ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.94 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடந்து வருகிறது. தடுப்பூசி பணிகள் மெதுவாக நடந்தால், இந்தியாவில் தற்போதைய 2-வது அலை முடிந்தபின், அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகும் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது.


latest tamil news



பொருளாதார பாதிப்பு

இரண்டாவது அலையில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தபோதிலும் முதல் அலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு 2வது அலையில் ஏற்படவில்லை. தற்போதுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தினாலும், பொருளாதார நடவடிக்கையை பாதிக்காத வகையில் அது இருந்து வருகிறது. ஆனால் அதிகமான மாநிலங்களில் நீண்ட கால லாக்டவுனை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
இரண்டாவது அலையில் நிலவும் குறியீடுகளின்படி, நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால், ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்களைச் சிக்கலில் இருந்து மீட்க மேலும் பல்வேறு பொருளாதாரச் சலுகைகளை வழங்கலாம்.
இவ்வாறு பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202117:44:43 IST Report Abuse
ஆப்பு ஃ ஐ பயன்படுத்துங்க.
Rate this:
Cancel
11-மே-202114:47:37 IST Report Abuse
ஆரூர் ரங் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் தகுதி வயது உள்ளவர்களில் 7 சதவீதத்துக்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.🤔 மீதி வேஸ்ட். கூவிக் கூவி அழைத்தும் வருவதில்லை என்ன செய்யப்🤫 போகிறது அரசு?
Rate this:
Cancel
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி பாரதத்தில் கரோனாவுக்கு 7 கோடி மரணம் சர்வ சாதாரணம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X