பொது செய்தி

இந்தியா

பயன்பாட்டிற்கு வருகிறது புதிய கொரோனா தடுப்பு மருந்து!

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்டுள்ள 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற பவுடர் வடிவிலான புதிய கொரோனா தடுப்பு மருந்து இன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளதாவது:'டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற புதிய கொரோனா தடுப்பு

புதுடில்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்டுள்ள 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற பவுடர் வடிவிலான புதிய கொரோனா தடுப்பு மருந்து இன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது.



latest tamil news


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளதாவது:'டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்து வெற்றிகரமாக மூன்று கட்ட பரிசோதனைகளைக் கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் இம்மருந்தை வழங்கலாம்.பாதுகாப்புத் துறையால் கண்டறியப்பட்டுள்ள இம்மருந்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு இரு தினங்களுக்கு முன் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவிலானது. அவசர உதவிக்காக முதற்கட்டமாக இன்று (மே 11) அல்லது நாளை 10 ஆயிரம் பாக்கெட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. மூன்று வாரங்களில் இதன் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும்.


latest tamil news




இம்மருந்து வைரசின் உயிரணுக்களில் குவிந்து எதிர்வினையாற்றி மேற்கொண்டு உடலில் வைரஸ் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. இம்மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 51 சதவிகிதத்தினர் 3 நாள்களில் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாள்களில் குணமடைந்தனர். இந்த மருந்தினைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்படாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash N - Chennai ,இந்தியா
11-மே-202123:14:11 IST Report Abuse
Prakash N Congratulations ட்ரடோ👏👏Jai Hind 👍👍The same please find cure for Type1 diabetes 🙏🙏🙏
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
11-மே-202123:09:16 IST Report Abuse
iconoclast தயவு செஞ்சி இதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்..மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்க பட்டுள்ளது
Rate this:
Cancel
தேச நல விரும்பி வாழ்த்துக்கள், வரவேற்கிறோம், நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க பாரதம். வாழ்க மோடி ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X