கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யும் காங்.,: நட்டா தாக்கு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருவதாக, அக்கட்சி தலைவர் சோனியாவுக்கு, பா.ஜ., தலைவர் நட்டா எழுதிய கடிதத்தில் கூறி உள்ளார்.இது தொடர்பாக சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நட்டா கூறி உள்ளதாவது: உங்களது தலைமையில், உங்கள் கட்சி ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் அதனையே அமல்படுத்த வேண்டும் எனக்கூறுவதை தவிர வேறு
jbnadda, bjp, bjp chief, bjp chief nadda, sonia, sonia gandhi, congress, congress leader, congress chief sonia, corona, corona virus, covid, letter,  ஜேபி நட்டா, நட்டா, பாஜ தலைவர் நட்டா, காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் சோனியா, சோனியா, சோனியா காந்தி, கடிதம், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19,

புதுடில்லி: கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருவதாக, அக்கட்சி தலைவர் சோனியாவுக்கு, பா.ஜ., தலைவர் நட்டா எழுதிய கடிதத்தில் கூறி உள்ளார்.

இது தொடர்பாக சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நட்டா கூறி உள்ளதாவது: உங்களது தலைமையில், உங்கள் கட்சி ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் அதனையே அமல்படுத்த வேண்டும் எனக்கூறுவதை தவிர வேறு ஒன்றும் செய்வது கிடையாது. இரண்டாவது அலை குறித்த மத்திய அரசின் எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, அது குறித்து எந்த தகவலும் வரவில்லை எனக்கூறி கேரளாவில் மிகப்பெரிய பேரணிகளை நடத்தி கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தீர்கள். போராட்டங்களை தூண்டிவிட்ட பின்னர், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பேசுகிறீர்கள்.

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ துவங்கிய பின்னர், வட இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமான கூட்டங்களில் உங்கள் கட்சி தலைவர்கள் காணப்பட்டனர். அங்கு அவர்கள் முகக்கவசம் அணியவில்லை. சமூக விலகலை கடைபிடிக்கவில்லை.


latest tamil news
இரட்டை நிலை கடைபிடித்த ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கைகள் என்றும் நினைவில் கொள்ளப்படும். கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமுடன் போரிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும். பொய்யாக பீதி ஏற்படுத்துவதையும், அரசியல் காரணங்களுக்காக தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதை நிறுத்த வேண்டும். மிகுந்த வேதனையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். கொரோனா விவகாரதத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்தை குறை சொல்லி, மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உருவான தடுப்பூசி, எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ சொந்தமானது அல்ல. அது நாட்டிற்கு சொந்தமானது. ஆனால், காங்கிரஸ் கட்சியால், தவறான அரசியலை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
பார்லிமென்டிற்கு புதிய கட்டடம் கட்டுவதை எதிர்ப்பதற்காக அரசியலில் காங்கிரஸ் புது வழிகளை கையாண்டு வருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் நட்டா கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
think out of box - london,யுனைடெட் கிங்டம்
12-மே-202102:13:23 IST Report Abuse
think out of box Positivity: There is not death in UP. Please spread it across.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-மே-202123:38:44 IST Report Abuse
Pugazh V இந்த பேரிடரைச் சரிவர நிர்வகிக்கத் தெரியாமல், பீஜேபீ தலைவர்கள் அமைச்சர்கள் கூட்டம் பரிதாபமாக விழித்து கொண்டு நிற்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியா வைப் பார்த்து பரிதாபப்படும் நிலைமைக்கு பீஜேபீ ஆக்கிவிட்டது. கும்பமேளா வை கூகிள் சேட்டலைட் வழியாகப் படம் பிடித்த நாளன்று 17 உலக நாடுகள் இந்திய ர்களுக்கு தடை விதித்தன. அடுத்த சில தினங்களில் மேலும் 4 நாடுகள் இந்தியர்களுக்கு தடை விதித்தன. இதற்கு காரணம் ஆளும் பீஜேபீ தான். சரிவர திட்டமிடலோ நிர்வாகமோ எதுவும் பீஜேபீ க்கு தெரியாது. பசுமூத்திரம் குடித்து. சாணியில் குளிக்கிற திரிபுரா முதல்வர் மற்றும் சில எம் பி க்களின் வீடியோக்கள் இங்கே நகைப்புக்கும் கோபத்திற்கும் ஆளாகின்றன என்று.ஜெர்மனியில் இருக்கும் நண்பன் இ மெயில் பண்ணினான்.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-மே-202123:31:24 IST Report Abuse
முக்கண் மைந்தன் ........இந்தெ கும்பலுக்கு ஆளெதெரிஞ்சிரிந்தாக்கா அவுங்கெல்லாம் அவியலு செஞ்ஜிட்டு இருந்திருப்பாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X