கங்கையில் மிதக்கும் சடலங்கள் : டிரெண்டிங்கில் களேபரம்

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
பாட்னா : கொரோனா காலக்கட்டத்தில் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்ததால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.இந்தியாவில் கொரோனாவின் வீரியம் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக உள்ளது. 3.75 லட்சத்திற்கும் அதிகமான பேர் நாள் ஒன்றுக்கு பாதிக்கப்பட்டு வரும் வேளையில் இறப்பு விகிதமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பீஹாரில் கொரோனா
Ganga, Bihar, Covid19, Corona,

பாட்னா : கொரோனா காலக்கட்டத்தில் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்ததால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

இந்தியாவில் கொரோனாவின் வீரியம் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக உள்ளது. 3.75 லட்சத்திற்கும் அதிகமான பேர் நாள் ஒன்றுக்கு பாதிக்கப்பட்டு வரும் வேளையில் இறப்பு விகிதமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பீஹாரில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.91 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் பீஹார் எல்லையோரம், பக்சார் மாவட்டத்தில் ஓடும் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
'இவர்கள் கொரோனா வைரசால் உயிரிழந்திருக்கலாம்' என, பக்சார் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தில், இந்த உடல்களை, உறவினர்கள் நதியில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. நதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை ஒழுக்கமான முறையில் தகனம் செய்து அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதியில் சடலங்கள் மிதந்த விவகாரம் அந்த ஊர் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #Ganga என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.


latest tamil news‛‛இந்தியாவில் என்ன நடக்கிறது. கோவிட்டால் இறந்தவர்களின் உடல்களை அப்படியே கங்கை என்ற புனித நதியில் கொட்டுகிறார்கள். இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது''.

பீஹாரில் புனித நதியான கங்கையில் சடலங்கள் மதிப்பதை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நாட்டிலிருந்து இதுவரை வெளிவந்த மிகவும் மனிதாபிமானமற்ற காட்சி. இப்படியொரு காட்சியை பார்க்க வேண்டுமா. மத்திய, மாநில அரசுகளே தயவு செய்து ராஜினாமா செய்துவிட்டு போங்கள்''.

‛‛ஏற்கனவே யமுனா நிதியிலும் இது போன்று நிறைய சடலங்கள் மிதந்ததாக செய்திகள் வந்தன. இப்போது கங்கயைிலும் மிதக்கிறது. நாடு என்ன நிலையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்''.

‛‛ஏற்கனவே நோய் தொற்றால் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது இதுபோன்ற சுகாதாரமற்ற முறையில் நதியில் சடலங்கள் மிதந்தால் நோய் தொற்று இன்னும் அதிகம் ஆகாதா''. இவர்கள் நிச்சயம் கொரோனாவால் இறந்தவர்களாக தான் இருப்பார்கள். உடலை என்ன செய்வது என்று தெரியாமல் இதுபோன்று நதியில் வீசி சென்றிருக்கலாம்''.

‛‛இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்போது மனது மிகவும் வலிக்கிறது. தெரிந்த காட்சிகள் இது, இன்னும் தெரியாமல் எவ்வளவு இருக்கிறதோ...'' இப்படி பலரும் தங்களது எதிர்ப்புகளை கருத்துக்களாக டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nithya - Chennai,இந்தியா
12-மே-202116:40:36 IST Report Abuse
Nithya parthasarathy badrinarayanan Indonesia ulla ungalukku ingu nadappadhu Patri enna theriyum....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-மே-202104:02:31 IST Report Abuse
தல புராணம் நமக்கு இது தான் முக்கியம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-மே-202103:58:40 IST Report Abuse
தல புராணம் ராமராச்சியத்தில் இதெல்லாம் சகஜமப்பா.. ஒரே நாடு பூரா சுடுகாடு திட்டம் வெற்றி.. இப்போ அடுத்த கட்டம் "ஒரே ஆறு, அங்கேயும் பாரு சுடுகாடு" திட்டம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X