அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபையின் சபாநாயகராக ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள், கடந்த மே 7-ம் தேதி பதவியேற்றனர். மேலும், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டார். அவர்,
தமிழகம், சட்டசபை, சபாநாயகர், அப்பாவு,துணை சபாநாயகர், பிச்சாண்டி

சென்னை: தமிழக சட்டசபையின் சபாநாயகராக ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள், கடந்த மே 7-ம் தேதி பதவியேற்றனர். மேலும், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டார். அவர், இன்று (மே 11) நடந்த முதலாவது சட்டசபை கூட்டத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil news


இதற்கிடையே, சட்டசபை சபாநாயகராக ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியிடுவதாக திமுக தரப்பில், அறிவிக்கப்பட்டது. அதன்படி, இருவரும் இன்று மனுதாக்கல் செய்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


யார் இந்த அப்பாவு?


கடந்த 1996ல், த.மா.கா., சார்பில் முதல் முறையாக, ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார், அப்பாவு. 2001ல் த.மா.கா.,வில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த 2006 தேர்தலில், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில், குறைந்த ஓட்டில் தோல்வி அடைந்தார். தற்போது, நான்காவது முறையாக, ராதாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் வழங்காததால், சபாநாயகர் பதவி, அப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சாமானிய குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, சமூக சேவை, மக்கள் சேவையில் ஈடுபட்ட அப்பாவு , தற்போது சபாநாயகராக உயர்ந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
12-மே-202100:54:51 IST Report Abuse
periasamy வாழ்த்துக்கள் அப்பாவு அண்ணனுக்கு மிக சிறந்த சபா நாயகராக செயல்பட வாழ்த்துக்கள் அப்பாவு அன்னான் அவர்கள் நல்ல நிறைய செய்தித்தாள் வாசிப்பாளர் நாட்டு நடப்பை விறல் நுனியில் வைத்திருக்கும் சில தமிழ் மகனில் இவரும் ஒருவர் என்ற பெருமைக்குரிய தமிழ்க்குடிமகன் நடுநிலைமையோடு செயல்பட வாழ்த்தி வணங்குகிறேன்
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
11-மே-202123:36:07 IST Report Abuse
vns சபாநாயகராக உயர்ந்து சபாநாயகர் தரத்தை தாழ்த்தியுள்ளார்.
Rate this:
Cancel
Ram - Panavai,இந்தியா
11-மே-202119:44:24 IST Report Abuse
Ram வாழ்த்துக்கள் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X