புதுடில்லி: 'இந்தியர்களுக்கு பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமை பறிக்கப்பட்டுவிட்டது' என, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பலியானவர்களின் சடலங்கள் ஆறுகளில் தூக்கிவீசப்பட்டு பிகாரை வந்தடைவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல், 'கொரோனாவால் பலியான கணக்கில்லா மனித உடல்கள் நதிகளில் அடித்து செல்லப்படுகின்றன. கொரோனா சிகிச்சைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான தங்களது உரிமைகளை இழந்துள்ளனர். பிரதமர் மோடி தனது ஆரஞ்சு நிற கண்ணாடியைக் கழற்றி வைத்துப் பார்த்தால் தான் செண்ட்ரல் விஸ்டாவைத் தவிர்த்த மற்ற காட்சிகளும் கண்களுக்குத் தெரியும்' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE