பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாள் முழு ஊரடங்கு

Updated : மே 12, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத்: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தெலுங்கானாவில் இன்று(மே 12) முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. காலை 6:00 முதல் 10: 00 மணி வரை தளர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று காலை 10 : 00 மணி முதல் தெலுங்கானாவில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
telengana, lockdown, corona, coronavirus, covid19, chandrasekara rao, தெலுங்கானா, ஊரடங்கு, கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, சந்திரசேகர ராவ், முதல்வர், தளர்வு,

ஐதராபாத்: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தெலுங்கானாவில் இன்று(மே 12) முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. காலை 6:00 முதல் 10: 00 மணி வரை தளர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று காலை 10 : 00 மணி முதல் தெலுங்கானாவில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பொது மக்கள் பொருட்களை வாங்குவதற்காக காலை 6: 00 மணி முதல் 10:00 மணி வரை தளர்வு அளிக்கப்படும். தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கு சர்வதேச அளவில் டெண்டர் விட அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும், ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்படுகிறது.


latest tamil news


தெலுங்கானாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 14 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கூறியது. ஆனால், மாநிலத்தின் பொருளாதாரத்தை காரணம் காட்டி, ஊரடங்கு அமல்படுத்த முடியாது என முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியிருந்தார். ஆனால், தற்போது கொரோனா அதிகரித்து வருவதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venu - Chennai,இந்தியா
11-மே-202116:59:11 IST Report Abuse
venu மாநகராட்சி எலெக்சன் முடியும்வரை சும்மா இருந்துவிட்டு இப்போது அறிவிக்கிறார். வீணாப்போனவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X