பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவலில் 3ம் இடத்தில் தமிழகம்

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பெருந்தொற்று பரவலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:13 மாநிலத்தில் ஒரு லட்சம்!நாட்டில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோரும், 6 மாநிலங்களில் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேரும் மற்றும் 17 மாநிலங்களில் 50

புதுடில்லி: கொரோனா பெருந்தொற்று பரவலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news



13 மாநிலத்தில் ஒரு லட்சம்!

நாட்டில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோரும், 6 மாநிலங்களில் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேரும் மற்றும் 17 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்குக் குறைவாகவும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய அளவிலான பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 21 சதவீதமாக உள்ளது. ஆனால் மொத்தமுள்ள 734-ல் 310 மாவட்டங்களில் தேசிய விகிதத்தைவிட அதிகமாக உள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி 19,45,299 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள எந்த நாடும் ஒரே நாளில் இவ்வளவு பரிசோதனை செய்ததில்லை.


latest tamil news



தற்போது கர்நாடகா, கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், அசாம், ஹிமாச்சல், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நகலாந்து, அருணாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் கோவா மாநிலங்களில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, புதுடில்லி, ஹரியாணா, சட்டீஸ்கர், பிஹார் மற்றும் குஜராத் மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது கொரோனா பரவலில் கர்நாடகா, கேரளத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
12-மே-202100:05:20 IST Report Abuse
Mohan இருங்க அடுத்த வாரம் 2000 வாங்கிட்டு இரண்டாவது இடத்துக்கும் அடுத்த 2000 வாங்கிட்டு முதல் இடத்துக்கும் வந்துருவோம். don't worry be happy.
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
11-மே-202123:17:54 IST Report Abuse
Anbuselvan மக்கள் நோயின் தீவிரத்தை கண்டு ஒத்துழைத்தால் இருபதாவது இடத்துக்கு சென்று விடலாம். மக்கள் என்பது எல்லா தரப்பினரையும்தான் அதாவது தொழிலாளி, முதலாளி எல்லோரும். உயிர் முக்கியம் பிகிலு
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
11-மே-202122:50:54 IST Report Abuse
J. G. Muthuraj நோயுற்றவர்களை சுற்றி நெருக்கமாக அமர்ந்து கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் செய்யும் தன்னலமற்ற சேவை நெஞ்சை உருகவைக்கிறது......ஒரு நோயாளி இறந்த இடத்திலே நான்கைந்து பேர் பின்பு அட்மிட் ஆகிறார்கள்.....இதற்கு காரணம் நோயாளிகளை முழுமையாக கவனிக்க மருத்துவ ஊழியர்கள் அங்கு இல்லை......பின்பு எப்படி நோயுற்றோர் எண்ணிக்கை குறையும்?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X