பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி 'பார்முலா'வை பகிர வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கை

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி: 'இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க, தடுப்பூசி தயாரிப்பை மத்திய அரசு பிற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்து வருகிறது; ஆயிரக்கணக்கான மக்கள்

புதுடில்லி: 'இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க, தடுப்பூசி தயாரிப்பை மத்திய அரசு பிற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.


latest tamil news
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்து வருகிறது; ஆயிரக்கணக்கான மக்கள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது.இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தேவையுள்ள நபர்களுக்குக் கூட முழுமையாகத் தடுப்பூசி செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்தியாவில் 9.7% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.latest tamil news


அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் 2 நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. அந்த நிறுவனங்களால் ஒரு மாதத்துக்கு 6 முதல் 7 கோடி தடுப்பூசிகளை மட்டுமே தயாரிக்க முடியும். இந்த வகையில் சென்றால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். அதற்குள் பல அலைகள் வந்துவிடும். எனவே தடுப்பூசி தயாரிப்பை அதிகரித்து அதற்கான தேசிய திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியம்.இதற்கான ஏராளமான நிறுவனங்கள் தடுப்பூசிகளைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும். தற்போது தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து, தயாரிப்பு பார்முலாவை மத்திய அரசு பெற்று, பிற நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். கடினமான இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு இதற்கான அதிகாரம் உள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
12-மே-202120:40:58 IST Report Abuse
spr டெல்லியை ஒரு யூனியன் பிரதேசமாக அறிவித்தற்கு என்ன காரணம்? அது இந்தியாவின் தலைநகரமாக இருப்பதால் மத்தய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்பதே அவசியமே இல்லை அதனையும் ஒரு மாநிலத்தின் பகுதியாக மாநகர பிரிவாக வைத்திருந்தால் இந்தப் பிரச்சனையே வர வாய்ப்பில்லை அந்தந்த மாநிலத்தின் பிரச்சினையை அந்தந்த மாநிலம் சமாளிக்க வேண்டும் அதற்கெல்லாம் மத்திய அரசை எதிர்பார்க்கக்கூடாது
Rate this:
Cancel
12-மே-202114:53:41 IST Report Abuse
மனுநீதி அதை சீரம் நிறுவனம் தான் முடிவு செய்யும். இந்த அறிக்கையை விட எந்த மருந்து உற்பத்தி நிறுவனத்திடம் எவ்வளவு வாங்கினாரோ?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
12-மே-202108:55:59 IST Report Abuse
vbs manian உலகில் பல மருந்து கம்பெனிகள் உள்ளன. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ஆராய்ச்சி செய்து ஒரு போர்முலாவை கண்டுபிடிக்கிறார்கள் அதை எப்படி இன்னொருவருக்கு தூக்கி கொடுக்க முடியும். தவிர intellectual property rights endra vishayam ullathu. இவருக்கு தெரியவில்லை. கோகோ கோலாவின் போர்முலா யாருக்காவது தெரியுமா. இதெல்லாம் அடிப்படை வியாபார நுணுக்கங்கள். போர்முலா கிடைத்தால் இவர் பாகிஸ்தானுக்கு கொடுத்து விடுவார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X