அரசியல் செய்தி

தமிழ்நாடு

7 பேர் விடுதலை: முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (76)
Share
Advertisement
சென்னை: ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தண்டனை பெற்றுள்ளனர். தண்டனை காலம் முடியும் முன்பே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என 2014 பிப்ரவரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில்
 7 பேர், விடுதலை, முதல்வர், ஸ்டாலின்,  ஆலோசனை

சென்னை: ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தண்டனை பெற்றுள்ளனர். தண்டனை காலம் முடியும் முன்பே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என 2014 பிப்ரவரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news




இது தொடர்பாக காங். உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விடுதலை செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீண்டும் முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தீர்மானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தீவிரமாக ஆராய்ந்து தன் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜன.25ல் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முடிவு செய்வதே உகந்ததாக இருக்கும். இது தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்' என கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் சட்ட அமைச்சர் ரகுபதி , அரசு தலைமை வக்கீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyamnats - tirunelveli,இந்தியா
16-மே-202108:08:03 IST Report Abuse
shyamnats நாடே கரோனாவில் பிரச்சனையில் பத்தி எரிந்து கொண்டிருக்கிறது, ராஜிவ் கொலையாளிகள், குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மாபெரும் ஆலோசனை. என்னவொரு பொறுப்புணர்ச்சி? விளங்கீனார் போலத்தான்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
14-மே-202120:48:17 IST Report Abuse
sankar வெளிய வந்தா கொரானா வந்துரப்போகுது - உள்ளேயே இருக்கட்டும்
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா
12-மே-202108:13:17 IST Report Abuse
Svs Yaadum oore //...சிவ.இளங்கோவன் . - கையாலாகாத பிரதமர் இருக்கும்வரை இறப்புகள் தொடரும்.....//....இறப்புகள் தொடரும் என்றால் எதற்கு தமிழ் நாட்டில் ஊரடங்கு .....இறப்புகள் தொடரம்னு அறிவிச்சிட்டு முதல்வரை ஊரடங்கை நீக்க சொல்லுங்க ....
Rate this:
sankar - Nellai,இந்தியா
14-மே-202120:50:21 IST Report Abuse
sankarவேறு எவராவது இருந்தா மட்டைக்கு ரெண்டா பொளந்துருவாங்களாக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X