பொது செய்தி

தமிழ்நாடு

அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021
Share
Advertisement
சென்னை:வரும் 14ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:புயல் உருவானால் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து, கிழக்கு மத்திய அரபிக் கடலில் கரையை கடக்க

சென்னை:வரும் 14ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இதுதொடர்பாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:புயல் உருவானால் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து, கிழக்கு மத்திய அரபிக் கடலில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அரபிக் கடலுக்கு சென்ற மீனவர்கள் வரும் 14ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளது.


latest tamil news



மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பொழியும் எனவும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X