அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்புக்கு முதல்வர் பொது நிவாரண நிதி: ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஸ்டாலின் வேண்டுகோள் விவரம்:கொரோனா 2 வது அலையால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரிடரை எதிர்கொள்ள, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மக்கள் அனைவரையும் தனிப்பட்ட

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.latest tamil newsஸ்டாலின் வேண்டுகோள் விவரம்:

கொரோனா 2 வது அலையால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரிடரை எதிர்கொள்ள, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மக்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறு பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி, உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள் மற்றும் பிற மருத்துவ கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும் என நான் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.


latest tamil newsநன்கொடைகள் மின்னனு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம்
* ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக செலுத்தி ரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம்.
*ECS/RTGS/ NEFT மூலமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.
வங்கிபெயர்-இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிளை-தலைமைச்செயலகம்.சென்னை-600009
சேமிப்பு கணக்கு எண்-117201000000070
IFScode-IOBA0001172

MICR Code-600020061
CMPRFPAN-AAAGC0038F இவ்வாறு வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
11-மே-202122:37:02 IST Report Abuse
kosu moolai அதெப்படிங்க முதல்வரே வெளிப்படை தன்மை இல்லாமல், எதிர்கட்சிகளின் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறீர்கள். பழனிச்சாமி க்கு ஒரு நீதி உங்களுக்கு ஒரு நீதியா.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
11-மே-202122:05:58 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு பிரதமரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்தா அது காங்கிரஸ் கட்சி உண்டியல்ல போயி விழுற மாதிரி நேரு செட் பண்ணி வெச்சதால (என்ன ஒரு கில்லாடி பாருங்க நேரு மாமா) மோடி பி எம் கேர் ஆரம்பிச்சாரு இது எங்க போயி விழும் கமாண்டர் அவர்களே ?
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
11-மே-202121:58:55 IST Report Abuse
vns நூதன ஊழல். வீராணத்திற்கப்புறம் திமுக பட்டறையில் இருந்து வரும் விஞ்ஞான ஊழல். முதல்வரும் அவர் குடும்பமும் செழித்து வாழ தமிழக த்ராவிஷங்களே உதவுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X