அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சிகளை கடந்து இணைந்து பணியாற்றுவோம்: எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:'கொரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தை மீட்க, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமை கட்சி என்பதை கடந்து, மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்பிட, நாம் அனைவரும் இணைந்து நிற்போம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தின், 16வது சட்டசபையில், உறுப்பினர்களாக பொறுப்பேற்ற மக்கள் பிரதிநிதிகள்
 கட்சிகளை கடந்து இணைந்து பணியாற்றுவோம்:  எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை:'கொரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தை மீட்க, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமை கட்சி என்பதை கடந்து, மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்பிட, நாம் அனைவரும் இணைந்து நிற்போம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தின், 16வது சட்டசபையில், உறுப்பினர்களாக பொறுப்பேற்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும், முதல்வர் என்ற முறையில் வாழ்த்துகள். கொரோனா பேரிடரில் இருந்து மக்களை பாதுகாப்பதே, அரசின் முதன்மையான பணி. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்கும், என் தலைமையிலான அரசு, முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.

அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகம், பத்திரிகை துறையினர் என பல தரப்பினரும், கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க, தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர். சமூக ஆர்வலர்களும், பொது நல அமைப்பினரும், தொழில் நிறுவனத்தாரும், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும், தமிழக அரசு முயற்சிகளுக்கு துணை நின்று, உதவிக்கரம் அளித்து வருகின்றனர்.

தமிழகத்தின், 16வது சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்களாக பொறுப்பேற்று உள்ளோர், தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில், வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாக, களம் கண்டு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், மக்கள் நலன் காப்பதில், ஒருமித்த சிந்தனையுடன், கட்சிப் பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும், அவர்களுக்கு உள்ளது.

எனவே, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், அவரவர் தொகுதிக்கு சென்று, பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய் தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்கவும்.தொகுதிகளில், கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில், ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி, ஆக்சிஜன் - மருந்து தேவை ஆகியவற்றில், நெருக்கடி இருந்தாலோ, அரசின் கவனத்திற்கு விரைவாக கொண்டு வரவும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மக்களை பாதுகாப்பதில், உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும்.

கொரோனா பேரிடரில் இருந்து, தமிழகத்தை மீட்பதற்கு, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, தோழமை கட்சி என்பதை கடந்து, மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்பிட, நாம் அனைவரும் இணைந்து நிற்போம்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு தனக்கு வந்தா ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினி.. அப்படித்தானே பார்ட்னர் ?
Rate this:
Cancel
binu nair - chennai,இந்தியா
12-மே-202107:59:45 IST Report Abuse
binu nair அப்படிதான் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது நடந்து கொண்டீர்களா?. மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்கிறதா மிஸ்டர் முதல்வரே?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
12-மே-202107:55:50 IST Report Abuse
madhavan rajan நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த அறிவு இல்லையா? குத்தல் குடைச்சல் வரும்போதுதான் அறிவு வருமா? இப்போது சென்று கிராம சபைக்கூட்டம் நடத்தி குறைகளை கேட்பதுதான்? யார் தடுத்தது? இப்போது வீட்டில் இருந்தபடியே அனைவரது குறைகளும் தெரிந்துவிட்டதா? அவைகளை களைய நடவடிக்கை எடுத்து விட்டீர்களா? இதற்காகத்தான் நீங்கள் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டீர்கள். அப்படியே இருந்திருக்க வேண்டும். ஆளும் கட்சியில் இருந்தால் நீங்கள் கட்சிக்காரர்களை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துவீர்கள் என்பது முந்தைய அனுபவம். இப்போதே பல இடங்களில் கட்சிக்காரர்கள் போலீஸ்காரர்களை தங்கள் கட்சி அடிமையாக நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.. அதற்கு உங்கள் ஆட்சியயின் ஆதரவும் இருக்கிறது.
Rate this:
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
12-மே-202111:36:14 IST Report Abuse
K. V. Ramani Rockfortமாதவன் ராஜன் சார், நீங்கள் கொடுத்த இந்த சாட்டையடியை, ஸ்டாலினிடம் சேர்க்குமா?...
Rate this:
Devan - Chennai,இந்தியா
12-மே-202118:40:57 IST Report Abuse
Devanஎல்லோரும் சேராது என்று தெரிந்தாலும் எழுதுகிறார்கள் .தங்கள் எண்ணங்களுக்கு வடிகால்களாக இதை உபயோகிக்கின்றனர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X