சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 11, 2021
Share
Advertisement
'பாழடைந்து கிடக்கும் கோவில்களை பராமரிப்பர் என பார்த்தால், அடிச் செங்கல்களையே உருவ முயற்சிக்கின்றனரே...' எனக் கண்டிக்க தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை: தமிழக அரசே, ஜீயர்களை நியமிக்க முனைவது, மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச் பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த அரசுக்கு வருமா... ஹிந்து விரோத, தி.மு.க., அரசின், முதல் ஹிந்து விரோத

பேச்சு, பேட்டி, அறிக்கை

'பாழடைந்து கிடக்கும் கோவில்களை பராமரிப்பர் என பார்த்தால், அடிச் செங்கல்களையே உருவ முயற்சிக்கின்றனரே...' எனக் கண்டிக்க தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை: தமிழக அரசே, ஜீயர்களை நியமிக்க முனைவது, மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச் பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த அரசுக்கு வருமா... ஹிந்து விரோத, தி.மு.க., அரசின், முதல் ஹிந்து விரோத செயலை எதிர்த்து, அனைவரும் வீதிக்கு வந்து போராட வேண்டும்.


'காங்., ராகுல், அழகிரி பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். ஸ்டாலினுக்கு தான் வரிந்து கட்டி வாழ்த்துகிறீர்கள். தி.மு.க., சார்பில், எம்.பி.,யாக திட்டமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
நேர்மை, திறமை, உழைக்க ஆர்வம் கொண்ட அதிகாரிகளை தேர்ந்தெடுத்து, முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்தியதிலும், கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்களை நியமித்ததிலும், கருணாநிதியின் நிர்வாக திறனையும், விரைந்து முடிவெடுக்கும் அவரது வேகத்தையும் பிரதிபலிக்கிறார் ஸ்டாலின்.


'நல்ல முயற்சி தான். எனினும், தாமதமான நடவடிக்கை. முந்தைய அரசே செய்திருக்க வேண்டும். செய்திருந்தாலும், நீங்கள் பாராட்டி இருக்க மாட்டீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 12 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அத்துடன் ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர், ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்.


'கொரோனா காரணமா; அதை ஒழிக்க பாடுபடும் மோடி அரசு காரணமா... எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பதே, கம்யூ.,க்களுக்கு வழக்கமாக போய் விட்டது...' எனக் கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில பிரமுகர் அருணன் அறிக்கை:
'நாட்டில் அனேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் அச்சம் நிலவுகிறது' என, மத்திய அமைச்சர் ஒருவரே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த அளவுக்கு நாட்டின் நிலைமையை கொண்டு வந்ததற்கு, மோடி அரசு தான் காரணம்.


'கர்நாடகாவில் தேஜஸ்வி தவிர்த்து, 24 பா.ஜ., - எம்.பி.,க்கள் உள்ளனரே. அவர்கள் எல்லாம் எங்கே இருக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
தமிழகத்திலும், எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால், எங்கே இருக்கின்றனர் என்று தான் தெரியவில்லை. பெங்களூரு மக்களை பார்த்தால், பொறாமையாக இருக்கிறது. தேஜஸ்வி சூர்யா போல, தமிழகத்திலும் விவேகத்துடன் களப்பணி ஆற்ற ஒரு எம்.பி., கூட இங்கு இல்லையே!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X