பொது செய்தி

இந்தியா

மாட்டு சாணம், கோமியம் உட்கொண்டால் பிற நோய்கள் பரவலாம்: ஐ.எம்.ஏ.,

Added : மே 11, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
ஆமதாபாத்: கொரோனாவை தடுக்கும் என நம்பி என வட இந்தியாவில் சிலர் மாட்டு சாணம் மற்றும் கோமியம் உட்கொள்கின்றனர். இதனால் விலங்குகளிடமிருந்து புதிய நோய் மனிதர்களுக்கு பரவக்கூடும் என இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் எச்சரிக்கிறார்.இந்து மதத்தில் மாடு என்பது புனிதமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக வீடுகளை சுத்தம் செய்வதற்கும், வழிபாட்டு
மாட்டு சாணம், கோமியம்,  பிற நோய்கள், பரவலாம், ஐ.எம்.ஏ.,

ஆமதாபாத்: கொரோனாவை தடுக்கும் என நம்பி என வட இந்தியாவில் சிலர் மாட்டு சாணம் மற்றும் கோமியம் உட்கொள்கின்றனர். இதனால் விலங்குகளிடமிருந்து புதிய நோய் மனிதர்களுக்கு பரவக்கூடும் என இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் எச்சரிக்கிறார்.

இந்து மதத்தில் மாடு என்பது புனிதமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக வீடுகளை சுத்தம் செய்வதற்கும், வழிபாட்டு சடங்குகளுக்காகவும் மாட்டு சாணத்தைப் பயன்படுத்துகின்றனர். அதில் சிகிச்சைக்கான பண்பும், ஆன்டிசெப்டிக் திறன் உள்ளது என்றும் நம்புகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயண் குருகுலத்தில் மாட்டு சாணத்துடன், கோமியத்தை கலந்து உடம்பில் பூசிக்கொண்டு சிகிச்சை எடுக்கின்றனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும், கொரோனா அண்டாது என்கின்றனர்.


latest tamil news




கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சைடஸ் கேடில்லா நிறுவன தலைமையகத்துக்கு அருகே இந்த குருகுலம் அமைந்துள்ளது. இங்கு மருத்துவர்கள் கூட வந்து மாட்டு சாணம், கோமியம் கலந்த கலவையை பூசிக்கொண்டு சிறிது நேரம் இருந்துவிட்டு, பால் அல்லது மோரால் கழுவிக்கொண்டு செல்வதாக கூறுகின்றனர். இதன் மூலம் அவர்கள் நோயாளிகளை பயமின்றி அணுக முடியும் என்கின்றனர்.


எச்சரிக்கை



ஆனால் இது போன்ற செயல்களை இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தவறான பாதுகாப்பு உணர்வுக்கு வழிவகுக்கும் மற்றும் சுகாதார பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்கின்றனர். கூட்டமாக கூடி இது போன்றவற்றை செய்யும் போது வைரஸ்கள் பரவுவதற்கு இது வாய்ப்பாகும் என்கின்றனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர், டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், “மாட்டு சாணம் அல்லது சிறுநீர் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு பயன்படுவதாக உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது இது. இது போன்றவற்றை உட்கொள்வதால் பிற நோய்கள் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடும்.” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
12-மே-202122:11:14 IST Report Abuse
தல புராணம் இதான் மோடி சொன்ன புதிய இந்தியாவின் டிஜிட்டல் சங்கிபாய்ஸ் 🤡🤡🤡 உலக அரங்கில் இந்தியன் என்றால் மூக்கை பிடிச்சிக்கிட்டு தள்ளி நிற்கிறார்கள். இந்திய உணவகங்களுக்கு வருபவர்கள் பெருவாரியாக குறைந்து விட்டார்கள். கோமியம் குடிப்பியா, சாணியிலே குளிப்பியான்னு மீட்டிங்லே கேக்குறான்.. 70 ஆண்டுகள் கடும் உழைப்பில் நிமிர்ந்திருந்தோம். ஏழாண்டில் எங்கே வந்து விழுந்திருக்கிறோம் பாருங்கள் 🔥😡
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
12-மே-202112:04:46 IST Report Abuse
Sridhar வியாபார கும்பல் (அதாவது விஞ்ஞான முறையில வைத்தியம் பாக்குறேன்னு சொல்லி ஒரு கும்பல் அலையுதே, அவுங்க) பயத்தின் பிடியில் இருக்கிறது. முதலில் இந்தியா உள்நாட்டிலேயே வாக்சின் தயாரித்து ஆப்படித்தது. கொலஸ்ட்ரால் சக்கரை வியாதின்னு கடந்த நாப்பது வருசமா ஒட்டி லக்ஷக்கணக்கான கோடிகளை சம்பாதித்தமாதிரி இந்த கொரோனா வக்சினிலும் ஒரு விளையாட்டு விளாடிடலாம்னு நினச்சவங்களுக்கு, அடி வயிறுல எரியுது. இந்தியாவை பத்தி ஏதாவது கேவலமா பேசி அவங்க எரிச்சலை ஆத்திக்கறாங்க. மத்தபடி இவுனுங்களையெல்லாம் சீரியசா எடுத்துக்க வேண்டிய அவசியமில்ல.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
12-மே-202111:30:29 IST Report Abuse
pradeesh parthasarathy ஏற்கனவே வூஹான் இலிருந்து துவங்கியது போல குஜராத்திலிருந்து மற்றொரு நோயை துவக்கி விடாதீங்க ..... நாடு தாங்காது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X