கொரோனா 2வது அலை பரவல் குறைகிறது

Updated : மே 13, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி :'தொடர்ந்து இரண்டாவது நாளாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சந்தித்த இந்தியா, இரண்டாவது அலையை எதிர்த்து தீவிரமாக போராடிவருகிறது. பிப்.,
கொரோனா 2வது அலை, பரவல்,குறைகிறது, சரிந்த பாதிப்பு

புதுடில்லி :'தொடர்ந்து இரண்டாவது நாளாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சந்தித்த இந்தியா, இரண்டாவது அலையை எதிர்த்து தீவிரமாக போராடிவருகிறது. பிப்., இறுதியில் துவங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த மாதம் மிகவும் அதிகரித்தது.தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்தது. பலியானவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வந்தது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்களாக தினசரி பாதிப்பு நான்கு லட்சத்துக்கு மேல் அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 3.66 லட்சமாக குறைந்தது. நேற்று, 3.29 லட்சமாக குறைந்தது.


இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இரண்டாவது நாளாக தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது; இது கொரோனா இரண்டாவது அலை பலவீனமடைவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளாக தென்படுகின்றன. மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டில்லி, சத்தீஸ்கர் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் துவங்கியுள்ளது.


எனினும் கர்நாடகா, கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில், 3.29 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 3.56 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கூடுதல் தடுப்பூசிமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:மாநிலங்களுக்கு மத்திய அரசு இதுவரை 18 கோடியே, மூன்று ஆயிரத்து 160 'டோஸ்' தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. இதில் வீணடிக்கப்பட்டது உட்பட, 17 கோடியே ஒன்பது லட்சத்து 71 ஆயிரத்து 429 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிடம் இப்போது 90 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இன்னும் மூன்று நாட்களுக்குள் கூடுதலாக 7. 29 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. எந்த மாநிலத்திலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
12-மே-202116:27:37 IST Report Abuse
sankar அதிமுக ஆட்சியில் ஊரடங்கில் குறைந்த கொரநா திமுக ஆட்சியில் அடுத்த நாளே குறையுது .
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12-மே-202110:24:57 IST Report Abuse
Mirthika Sathiamoorthi கிட்டத்தட்ட 22 மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது கொரானா தொற்று குறையுமா? இது சந்தோசமான செய்தியா? எல்லாம் இயல்பு நிலையில் இருக்கும்போது கொரானா தொற்று குறையுதான்னு பாக்கணும். டெல்லி ஒருமாசமா லாக்டௌன். இதோ மே 17 வரை தொடரும்ன்னு சொல்லியாச்சு. இதை பெருமையா கொரானா குறையுதுன்னா? இதேதானய்யா முதல் அலைலும் சொன்னாக. மக்களுக்கு கொரானா மேல பயமே இல்லாம பன்றதே வேலையாப்போச்சு. உண்மையான அறிக்கை மறைக்கப்படாத வெளிபடை அறிக்கை மக்களுக்கு மரணத்தின் உண்மை நிலவரம் தெரியும்போது பயமும் தான வரும். கொரானா மீது மக்களுக்கு பயமே இல்லை. கொரானாவை விடுங்க சிக்கன் குனியா பன்றி காய்ச்சல் டெங்கு பறவை காச்சல் இதுமேல மக்களுக்கு பயம் இருக்கு? எந்த நோயின் உண்மை நிலையை எந்த அரசும் வெளிப்படையா சொன்னதே இல்ல. இதே மாதிரி கொரானாவும் வரும் போயிடும்ன்னு மக்களை நம்பவைச்சதுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததுக்கு யாருங்க பொறுப்பு? மக்களா? இதோ ஆரம்பிச்சிட்டோம் கொரானா கொறஞ்சிடுச்சுன்னு. இந்த செய்தியை படிக்கும் மக்கள் என்ன நினைப்பான்? கொரானா கொறஞ்சதுக்கு காரணம் ஊரடங்கா? மக்கள் பொறுப்புடன் நடந்ததுக்க? இதுக்கு முதலில் பதில் சொல்லுங்க. மூன்றாம் அலைவரும்ன்னு மத்திய அரசு சொல்லுதே ஏன்? அதுதான் கொரானா குறைய ஆரம்பிச்சிடுச்சே? முதலில் ஊரடங்கினாள் தான் இந்த கொரானா குறைஞ்சதுன்னு ஒப்புக்கிட்டு, பாத்தீங்களா ஒருத்தனுடன் ஒருத்தன் தொடர்பில் இல்லைன்னா கொரானா பரவாது, அதனால் தயவுசெய்து சமூக இடைவெளி மாஸ்க் போடுங்கன்னு விளக்கி உண்மையான சாவு எண்ணிக்கையை சொல்லி இந்த நோயின் பயங்கரம் புரியவச்சு மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துங்க. கொரானாவை இல்லாமல் பண்ணிடலாம். அதை விட்டுட்டு மறுபடியும் கொரானா குறையுது கொரானாவ வென்று விட்டோம்ன்னு போன வருஷம் பண்ணினா அதே தப்பை பண்ணாதீங்க. சாவு எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 லட்சம், நோயால் பாதிக்க பட்டவர்கள் 27 லட்சம். இவர்களிடமிருந்து எத்தனை பேருக்கு தொற்று பரவியிருக்குன்னு இன்னும் தெரியாத சூழலில் தயவு செய்து கொரானா குறையுதுன்னு இப்போ சொல்லி மக்களிடம் அலட்சிய போக்கை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்....
Rate this:
blocked user - blocked,மயோட்
12-மே-202113:19:49 IST Report Abuse
blocked userதிமுக பாணியில் கருத்து - அதாவது தனக்குப்புரியவில்லை என்றால் மற்றவர்களையும் குழப்புவது. நோய் தொற்றில் இருந்து விடுபடுவோரின் எண்ணிக்கை புதிதாக நோய் தொற்றியோரின் எண்ணிக்கைக்கு சற்றுதான் குறைவு. அதாவது புதிதாக நோய் தொற்றுவோருக்கு மருத்துவ வசதிகள் கிடைக்க அதிக வாய்ப்பு. இது நல்லதொரு முன்னேற்றம். தனிமைப்படுத்தியோரது தொடர்புகளை கண்டுபிடித்து சோதனை செய்ய வலியுறுத்த வேண்டும்....
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12-மே-202114:56:20 IST Report Abuse
Mirthika Sathiamoorthiநீங்க இப்போ பிஜேபி மாதிரி கருது சொல்றீங்க...அப்போ போன ஊரடிங்கிலிருந்து ஒரு பாடமும் கத்துக்கலைன்னு அர்த்தம்... சென்றவருடம் ஊரடங்கு அறிவிச்சப்ப இருந்த கொரானா தோற்று பரவளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சும்மா உங்களுக்குள்ளே கேளுங்கள். வெறும் 600 பேர். அதுக்கே ஊரடங்கு. எதுக்கு ஊரடங்க நீடிச்சு நீடிச்சு 90 நாட்களாச்சு? 600 இலிருந்து 6000 ஆச்சு அப்புறம் 60 ஆயிரம் ஆச்சு அப்புறம் 90 ஆயிரம் நோய் தொற்று அதிகரிச்சுட்டே போனதால் மூணுமாத ஊரடங்கு... ஊரடங்கில் தான் புதிதாக நோய் தொற்றியோரின் எண்ணிக்கை அதிகரிக்கா ஆரம்பிச்சது..அப்போ இந்த 600 பெரும் ஒரு லட்சம் பேருக்கு பரப்பிட்டானா?....இது எதனால் ஏற்பட்டதுங்கிற ஆராய்ச்சி இன்னமும் நடந்திட்டு இருக்கு...அப்போ நாம் சொன்னது சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கணும் டெஸ்ட் கிட் பத்தலைங்கிற பேச்சும் படுகைகளில் எண்ணிக்கை அதிகரிக்க கோரிக்கையும் ..நல்ல கவனிங்க ஆக்சிஜென் தேவை பற்றிய பேச்சல்ல..ஆனா உருமாறிய கொரானா அப்போ நோயின் வீரியம் அதிகரிக்க இரண்டு வாரங்களாகும் அதுக்குள்ள ஏதாவது சிகிச்சை பண்ணிடலாம்... இப்போ மூணே நாட்களில் கொரானா வீரியம் தாக்கும்.... இப்போ நாம பேசுவது டெஸ்ட் கிட்டா? ஆக்சிஜனும் ஊசியும். நோயின் அதி தீவிரத்தை புருஞ்சுக்கோங்க.....இந்த கொரானா பாதிக்க பட்டவங்க கிட்டத்தட்ட 22 லச்சம் பேர்...இன்னமும் மக்களிடம் புதிய நோய் தொற்றியோரின் எண்ணிக்கை குறையுதுன்னு நம்பிக்கை கொடுக்காதீங்கன்னு சொல்றேன் இது புரியலைன்னா? ..மூன்றாவது அலைவரும்ன்னு யார் சொன்னது? இரண்டாம் அலையே இவளவு வீரியம்ன்னா? மூன்றாம் அலை? அப்போ தடுப்பூசி ஒன்றே தீர்வுஎன்கிற சூழலில் இப்போவாரைக்கும் வெறும் 17 கோடி பேருக்கு மட்டும் ஊசி.. இதில் இரண்டு டோஸ் போட்டவங்க எத்தனை கோடி...100 கோடிக்கும் எப்ப தடுப்பூசி? இந்த தடுப்பூசிகளின் வீரியம் ஒரு வருடம் மட்டுமே..ஒருவருடம் கழித்து மீண்டும் ஊசி போடணும்..மறுபடியும் 100 கோடி ஆளுங்களுக்கு...தடுப்பூசியின் பயன் எல்லோருக்கும் கிடைக்கும் சூழல் இப்போ இருக்கிறமாதிரி எனக்கு தெரியலை..ஒரு வழி நம்மை நாமே காப்பது...அதனால் விழிப்புணர்வும், சமூக இடைவெளியும் மாஸ்க்கும் அணிவதன் அவசியமும் மக்களிடம் கொண்டுபோய் சேருங்கன்னு சொல்றேன்..கொரானா குறையுது..புதிதாக நோய் தொற்றுவோருக்கு மருத்துவ வசதிகள் கிடைக்க அதிக வாய்ப்பு.அப்டின்னு சொல்லி மக்களிடம் அலட்சிய போக்கை ஏற்படுத்தாதீர்ன்னு சொன்ன கருது உங்களுக்கு புரியலைன்னா வேறென்ன சொல்லி புரியவைக்க முடியும்? இதுலேயும் திமுக அதிமுகான்னு அரசியல் செய்யும் உம்மையெல்லாம்.......
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
12-மே-202110:16:49 IST Report Abuse
blocked user ஊரடங்கு இருப்பதால் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. குணமாகி வீடு திரும்பியோரை ஒப்பிட்டு கணக்கிடுவது நல்லது. ஒரு வாரம் தொடர்ந்து குறைந்தால் குறைகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். சுற்றித்திரிவோரை லாடம் கட்டுவது நலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X