'பார்லி.,க்கு புதிய கட்டடம் கட்டுவதை தடுக்க முயற்சி'

Updated : மே 13, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
புதுடில்லி :'புதிய பார்லிமென்ட் கட்டுவதை தடுக்கும் தொடர் முயற்சியாகவே பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து 'இந்தியா கேட்' வரையிலான பகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிய பார்லி மென்ட் கட்டடமும் கட்டப்பட உள்ளது. 'கொரோனா
'பார்லி., புதிய கட்டடம், தடுக்க முயற்சி'

புதுடில்லி :'புதிய பார்லிமென்ட் கட்டுவதை தடுக்கும் தொடர் முயற்சியாகவே பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து 'இந்தியா கேட்' வரையிலான பகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிய பார்லி மென்ட் கட்டடமும் கட்டப்பட உள்ளது. 'கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியுள்ள நிலையில் இந்த கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.இந்த மனுவை உடனடியாக விசாரிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் லுத்ரா மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 'மனு மீதான விசாரணையை முன் கூட்டியே நடத்தக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் மனு தாக்கல் செய்யலாம்' என, உத்தரவிட்டது. இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய பார்லிமென்ட் கட்டுவது உட்பட, மறு சீரமைப்பு பணிகளை முடக்க தொடர்ந்து முயற்சி நடக்கிறது. அதன் ஒரு முயற்சியாகவே இந்த பொது நலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறு சீரமைப்பு திட்டத்தில், டில்லி மெட்ரோ உட்பட பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளன.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் கட்டுமான இடத்திலேயே தங்கி, வேலை பார்ப்ப வர்கள் மட்டும் பணியாற்ற, டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதித்துள்ளது. அதன்படி தான், தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு மனுவில் அரசு கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
12-மே-202123:06:40 IST Report Abuse
R chandar Instead of constructing parliament government can think on building housing to people with reduced rent,or lease, construct more hospital and enhance the health sector , kindly note people are not against development but need the required one for them , government should kindly consider for constructing housing for middle class people for rent and construct more hospital and spend on infrastructure development by way of installing more power plant,oxygen plant,and more facility for the people of the country
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
12-மே-202122:50:06 IST Report Abuse
m.viswanathan வெந்தது போதும் முந்தானையில் போடு என்பது போல் உள்ளது தற்போதைய பாராளுமன்றம் காட்டும் நிலை , கொரோனாவை ஒழித்து விட்டு , பின் கட்டலாமே ,
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
12-மே-202120:53:46 IST Report Abuse
Sivagiri ஐந்து மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் கம்பெனி காணாமல் போயி விட்டது . . .மக்களிடமும் மற்ற கட்சியினரிடமும் - தனது மூஞ்சியை காட்ட முடியவில்லை - அந்த இமேஜை மாற்றவே - இப்பிடி தனது மூஞ்சியை காட்ட ஒரு முகமூடி தேவைப்படுகிறது . இந்த பார்லிமென்ட் விஸ்டா- வை ஒரு அவசர கால நிவாரண பிரச்சினையாக - முகமூடியாக - இப்போ எடுத்திருக்காய்ங்க காங்கிரேஸ் வெட்டிப் பயல்கள் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X