அனில் தேஷ்முக் மீது அமலாக்க துறை வழக்கு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, அமலாக்க துறையினர் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.மஹாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்., மூத்த தலைவர் அனில் தேஷ்முக், 71, அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.மும்பையில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் இருந்து மாதந்தோறும், 100 கோடி ரூபாய் வசூல்
 அனில் தேஷ்முக், அமலாக்க துறை, வழக்கு

புதுடில்லி :மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, அமலாக்க துறையினர் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்., மூத்த தலைவர் அனில் தேஷ்முக், 71, அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.
மும்பையில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் இருந்து மாதந்தோறும், 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரும்படி போலீசாரிடம் அவர் கூறியதாக, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் குற்றம் சாட்டினார்.


latest tamil news



இதையடுத்து அனில் தேஷ்முக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் அனில் தேஷ்முக் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.இந்நிலையில் அவர் மீது அமலாக்க துறை அதிகாரிகள், பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, 'அனில் தேஷ்முக் மீது அமலாக்க துறை பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த, அவருக்கு சம்மன் அனுப்பப்படும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
11-மே-202123:11:16 IST Report Abuse
M  Ramachandran மாதம் நூறு கோடி. யப்பா மலை முழுங்கி மஃஹாதேவன்.இப்படியா போனால் இந்தியா மக்களின் கதி. சரத் பாவார் உத்தா மர் போல பேசுகிறார். ஆனால் அதன் பின் பக்கம் இவ்வளவு அளுக்கு. இந்த உத்தம் தாக்கரே ஒரு பதவி வெறியில் கூடா நட்பு. சேர்ந்து இப்போ அதன் பலன் தான் இப்படி. எப்படி ஒரு நல்ல அரசை இது போன்றவர்களால் கொடுக்க முடியும்?
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
11-மே-202122:14:16 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு பத்துக்கு ஒன்னு என்ற விகிதத்தில கேந்திர சர்க்காருக்கு கமிஷன் தரணும் அங்கிள் நீங்க கொடுக்கலையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X