அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரண நிதி: ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : மே 13, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (71+ 21)
Share
Advertisement
சென்னை :'முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி வழங்குங்கள்' என, பொது மக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, 1.52 லட்சம் பேர், கொரோனா நோய் தொற்றுக்காக, சிகிச்சை பெற்று வருகின்றனர். வரலாறு காணாத, இந்த சவாலை
கொரோனா , நிவாரண நிதி , ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை :'முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி வழங்குங்கள்' என, பொது மக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, 1.52 லட்சம் பேர், கொரோனா நோய் தொற்றுக்காக, சிகிச்சை பெற்று வருகின்றனர். வரலாறு காணாத, இந்த சவாலை சமாளிக்கவும், மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.
மருத்துவமனைகளில் உள்ள, படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல்; அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும், தடையின்றி கிடைக்கச் செய்தல்.


நடவடிக்கைஆக்சிஜன் வினியோகத்தை மேம்படுத்துதல்; கூடுதல் மருத்துவ மற்றும் பிற பணியாளர்களை, பணி அமர்த்துதல் என, பல்வேறு நடவடிக்கைகள், எடுக்கப்பட்டு வருகின்றன.நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, மாநிலத்தின் பொருளாதாரம், மீண்டெழுவதற்கு சிரமப்பட்டு வரும் நிலையில், பேரிடரை எதிர்கொள்ள, அரசு கூடுதல் நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய தேவை உள்ளது.எனவே, அரசின் முயற்சிகளுக்கு, நம் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும், தங்களால் முடிந்த வகையில், உதவி செய்ய வேண்டியது அவசியம். நாம் அனைவரும் ஒன்று கூடி, இப்போரை வெல்வதற்கான நேரம் இது.இந்த சூழலில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்.

ஒவ்வொருவரும் அளிக்கும் நன்கொடைகள் அனைத்தும், கொரோனா நடவடிக்கைகளுக்கு மட்டுமே, முழுமையாக பயன்படுத்தப்படும். நன்கொடை விபரங்கள், இந்நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும், வெளிப்படையாக பொது வெளியில் வெளியிடப்படும்.நன்கொடைகளுக்கு, வருமான வரி சட்டத்தில், 100 சதவீதம் வரி விலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கும் விலக்கு அளிக்கப்படும்.

நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி:நன்கொடைகளை, வங்கி இணைய சேவை, கடன் அட்டை அல்லது பற்று அட்டை பயன்படுத்தி, ereceipt.tn.gov.in/cmprf.html என்ற, இணையதளம் வழியே செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., - என்.இ.எப்.டி., வழியே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, நேரடியாக அனுப்பலாம்.


நன்கொடைவங்கி பெயர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிளை, தலைமைச் செயலகம், சென்னை - 600009; சேமிப்பு கணக்கு எண், 117201000000070; IFS Code, IOBA0001172 MICR Code, 600020061, CMPRF PAN, AAAGC0038F. மொபைல் ஆப் வழியாகவும், பணம் செலுத்தலாம்.இவ்வாறு பணம் அனுப்புவோர், உரிய அலுவலக பற்றுச்சீட்டு பெற, பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், தங்கள் முழு முகவரி, இ - மெயில் விபரம், டெலிபோன், மொபைல் எண் தெரிவிக்க வேண்டும்.

நிவாரண நிதி வழங்கும், வெளிநாடு மக்கள், 'IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai' என்ற SWIFT Codeஐ பின்பற்றவும்.மின்னணு பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள், குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை வழியாக, 'அரசு இணை செயலர் மற்றும் பொருளாளர், முதல்வர் பொது நிவாரண நிதி, நிதித் துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600009, தமிழ்நாடு, இந்தியா' என்ற முகவரிக்கு அனுப்பலாம். இ - மெயில் முகவரி, iscmprf@tn.gov.in.

தற்போதைய நிலையில், முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ, நேரடியாக நன்கொடை வழங்குவதை, தவிர்க்க வேண்டும். எனினும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள், பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும்.
நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியின் கீழ், கொரோனா நிவாரணத்திற்காக, நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் கீழ், வங்கி கணக்கில் செலுத்தலாம்.வங்கி பெயர்;

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிளை, தலைமைச் செயலகம், சென்னை - 600009;
சேமிப்பு கணக்கு எண், 117201000017908, IFSC Code; IOBA0001172.
இந்த நன்கொடைகளும், மாநில அரசால் மேற்கொள்ளப்படும், கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே, முழுமையாக பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (71+ 21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-மே-202118:58:57 IST Report Abuse
meenakshisundaram ஐயோ .திமுக காரன் தான் சொல்வான் -இதை அரசு கேட்கிறது என்று ஆனால் அவர்களின் ரெகார்ட் சரி இல்லியே அதை நிவாகிக்கிறவன் இவங்களேதானே ?வீராணம் குழாய் சொன்ன கதையே மரக்கலியே புதிய தலைமுறை ஆட்சின்னா இன்னா அர்த்தம் ?புது ,நவீன முறைகளில் அடிப்போம் என்று தானெ அர்த்தம் .-குணம் செத்தால் போகும் .ரூபம் சுட்டால் போகும் -பழமொழி நினைவுக்கு வருது
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
13-மே-202108:01:56 IST Report Abuse
Indhuindian உங்க பாராளுமன்ற உறுப்பினரும் உங்கள் குடும்பத்தில் ஒருவருமான திரு தயாநிதி மாறன் தேர்தல் சமயத்துல அரசாங்கம் பிச்சை எடுக்கக்கூடாதுன்னு சொன்னாரே இப்போ அவரை கேட்டீங்களா பிச்சை எடுக்கலாமான்னு. பேரிடர் கால நிதி அரசு கேட்பது சரியான வெளிப்பாடு. ஆனால் அதை அரசியல் ஆதாயத்திற்காக கேவலப்படுத்திய உங்க எம் பி ய என்ன பண்ண போறீங்க
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
13-மே-202100:17:00 IST Report Abuse
அசோக்ராஜ் "விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு". எங்கேயோ கேட்ட மாரி இருக்கா? மீண்டும் லாட்டரி கொண்டாந்து கோரோனா பேர்ல நூறு ரூவா சீட்டு விடுங்க. மார்ட்டியையே ஏஜண்ட்டா போட்டு அள்ளிடலாம். டொனேசன், பிச்சை எல்லாம் ஓல்டு திங்கிங்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X