அரசியல் செய்தி

தமிழ்நாடு

அந்த மாதிரி தலைவன் நான் அல்ல: கமல்

Updated : மே 13, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை :'தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவர் என காத்திருக்க மாட்டேன். அவர்களை திருத்தும் கடமையும் உரிமையும் உள்ள தலைவன் நான்' என கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டது, வியாபாரமாகி விட்ட அரசியலில் இன்னொரு கட்சியாக இருக்க அல்ல. கடமையாக பார்ப்பவர் மட்டுமே இக்கட்சியில் இருக்க முடியும். கோவை தெற்கு
Kamal, Kamal Haasan, MNM, கமல், கமல்ஹாசன்

சென்னை :'தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவர் என காத்திருக்க மாட்டேன். அவர்களை திருத்தும் கடமையும் உரிமையும் உள்ள தலைவன் நான்' என கமல் கூறியுள்ளார்.


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:


மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டது, வியாபாரமாகி விட்ட அரசியலில் இன்னொரு கட்சியாக இருக்க அல்ல. கடமையாக பார்ப்பவர் மட்டுமே இக்கட்சியில் இருக்க முடியும். கோவை தெற்கு தொகுதியில் என் சொந்த பணத்தை செலவு செய்தேன்; அது எனக்கு பெரிது. ஆனால், நம்முடன் களம் கண்ட போட்டியாளர்களின் செலவை ஏணி வைத்தால் கூட அது எட்டாது.

மும்முனைப் போட்டியில் 33 சதவீதம் மக்கள், பணம் பெறாமல் நம்மை மதித்து ஓட்டு போட்டுள்ளனர். இன்னும் இரண்டாயிரம் பேர் ஓட்டுப் போட்டிருந்தால் சரித்திரம் மாறியிருக்கும். இதே போன்று அனைத்து தொகுதிகளையும் மாற்ற முடியும். நாம் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். சாதனை என்பது சொல் அல்ல; செயல். எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது. விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கள ஆய்வு செய்து, தொண்டர்கள் எனக்கு செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். அந்த ஆய்வு இல்லாமல், களை எடுப்பதும் உசிதமல்ல.தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவர் என, காத்திருப்பவன் நானல்ல. தவறிழைத்தவர்களை திருத்தும் கடமையும், உரிமையும் உள்ள தலைவன் நான்.

கடமை தவறினால், இங்கே இருக்க முடியாது என அறிந்தவர்கள், வேறு சந்தை தேடிப் போவர் என்பது கட்சியை துவங்கிய போதே எனக்கு தெரியும். நம் கட்சியின் நோக்கம், இலக்கு ஆகியவற்றை சூழலுக்கு ஏற்ப, சதிக்கு ஏற்ப, நாம் மாற்றியமைக்க முடியாது. எல்லா தொகுதிகளிலும் பொறுப்புகளுக்கு, பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டும், அந்தப் பொறுப்புகளுக்கு ஆள் போடாமல் இருந்தது விபத்தல்ல என்பது, இப்போது வெளிச்சமாகிறது.

இந்த நிலையில், மய்யத்தில் தங்கள் கட்சியை இணைத்துக் கொள்ள விரும்புவதாக, சில இளம் கட்சிகள் முன்வந்துள்ளன. மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மற்றும் ஒரு சான்று இது.உங்களை எல்லாம் நேரில் சந்திக்கத் துடிக்கிறேன். ஆனால், இப்போது பொது ஊரடங்கு இருப்பதால், அது சாத்தியம் அல்ல.

எனவே, மக்கள் சங்கடங்கள் குறையட்டும், ஓயட்டும். மீண்டும், நாம் சந்திப்போம். அதற்குள், உங்கள் மனதில் உள்ளதை, எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும், எனக்கு முக்கியமானது, கட்சிக்கு மகத்தானது.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
15-மே-202121:06:25 IST Report Abuse
madhavan rajan அந்த மாதிரி என்ற அனாவசியமான வார்த்தையை எடுத்துவிடுங்கள்.
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
13-மே-202106:18:40 IST Report Abuse
s vinayak நீங்கள் குடுக்காட்டி என்ன? 33% மக்கள் உங்க A team இடம் வாங்கியிருப்பார்கள். அதுதானே ஏற்பாடு? அதையும் மீறி பாஜக வெற்றி.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
12-மே-202122:28:54 IST Report Abuse
Vijay D Ratnam அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026.ல் வரும்போது இவருக்கு 72 வயதாகி இருக்கும். எம்ஜிஆர் 60 வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். எழுபது வயதில் இறந்தே போனார். ஜெயலலிதா 68 வயதில் இறந்து போனார். இவருக்கு இப்பவே 67 வயதாகிவிட்டது. இப்படியே பெனாத்திக்கிட்டு இருக்கவேண்டியதுதான். 2026 ல் வழக்கம் போல அதிமுக திமுக போட்டிதான் இருக்கும். விஜய் போன்றவர்கள் போட்டியில் இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X