டிசம்பருக்குள் வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுதலை: ஆஸி., அரசு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021
Share
Advertisement
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனையடுத்து ஸ்காட் மோரிசன் அரசு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் ஆஸ்திரேலிய நாட்டின் இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்தை செலுத்திவிட முடிவெடுத்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் தாக்கத்தை வெகுசிறப்பாகக் கையாண்டுவரும் ஒரு சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனையடுத்து ஸ்காட் மோரிசன் அரசு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் ஆஸ்திரேலிய நாட்டின் இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்தை செலுத்திவிட முடிவெடுத்துள்ளது.



latest tamil news




உலகில் கொரோனா வைரஸ் தாக்கத்தை வெகுசிறப்பாகக் கையாண்டுவரும் ஒரு சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. ஆஸ்திரேலிய அரசு முன்னதாக இந்திய அரசுக்கு மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள், முதல்நிலை பணியாளர்கள் அணியும் முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவியது. இதேபோல மோடி அரசும் ஆஸி., உதவி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தற்போது தடுப்பு மருந்து விநியோகம் தீவிரமடைந்து வருகிறது.


latest tamil news




இன்னும் 6 மாதம்



50 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்து தேவைப்படும் நிலையில் தற்போது 25 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்குள் 80 சதவீத மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிடும் என்று ஸ்காட் மோரிசன் அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா இளைஞர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படும் எனக் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X