எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா எம்.பி., ராஜினாமா விவகாரம்:அந்தஸ்தை இழக்கிறது அ.தி.மு.க.,

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், ராஜ்யசபாவில் அக்கட்சியின் பலம் குறைந்தது. அதனால், கட்சி குழு அந்தஸ்தை, அ.தி.மு.க., இழக்கிறது. ராஜ்யசபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களாக தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், சந்திரசேகரன், வைத்திலிங்கம், முனுசாமி, புதுச்சேரி கோகுலகிருஷ்ணன் என, எட்டு பேர்
ராஜ்யசபா எம்.பி., ராஜினாமா, அந்தஸ்து, அ.தி.மு.க., இழப்பு

அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், ராஜ்யசபாவில் அக்கட்சியின் பலம் குறைந்தது. அதனால், கட்சி குழு அந்தஸ்தை, அ.தி.மு.க., இழக்கிறது.

ராஜ்யசபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களாக தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், சந்திரசேகரன், வைத்திலிங்கம், முனுசாமி, புதுச்சேரி கோகுலகிருஷ்ணன் என, எட்டு பேர் இருந்தனர். சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற வைத்திலிங்கமும், முனுசாமியும், தங்களின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளதால், எம்.பி.,க்கள் எண்ணிக்கை, ஆறாக குறைந்துள்ளது.


பலம் குறையும்வரும் அக்டோபரில், கோகுலகிருஷ்ணனின் பதவி காலம் முடிவடைவதால், ஐந்தாக குறையும். பின், 2022ம் ஆண்டு ஜூனில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய மூவரின் பதவி காலியாகும் பட்சத்தில், இரு எம்.பி.,க்களாக, அ.தி.மு.க.,வின் பலம் குறைந்து விடும். அதே ஆண்டில் ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி.,க்கள், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய இருவரின் பதவி காலியாகிறது. இந்த ஐந்து இடங்களுக்கும் நடக்கிற தேர்தலில், போட்டியின்றி, எம்.எல்.ஏ.,க்கள் பலத்தின் அடிப்படையில், தி.மு.க.,வுக்கு மூன்று; அ.தி.மு.க.,வுக்கு இரண்டு எம்.பி.,க்கள் கிடைப்பர்.எனவே, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில், ராஜ்யசபாவில் அ.தி.மு.க.,விற்கு, நான்கு எம்.பி.,க்கள் தான் இருப்பர்.
ராஜ்யசபாவில், ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம் ஐந்து எம்.பி.,க்கள் இருந்தால் தான், கட்சிகளின் குழுவில் இடம் பெற முடியும். அப்போது தான், அக்கட்சி எம்.பி.,க்களுக்கு, ராஜ்யசபாவில் நடைபெறும் விவாதங்களில் பேசுவதற்கு, குறிப்பிட்ட நேரத்தை ராஜ்யசபா தலைவர் ஒதுக்குவார்.


குறைந்த நேரம்ஒரு கட்சியில், ஐந்து எம்.பி.,க்களுக்கு குறைவாக இருந்தால், அக்கட்சி, இதர கட்சிகள் பட்டிலில் தான் சேர்க்கப்படும். அப்படி இதர கட்சிகள் பட்டியலில் இடம் பெறும் எம்.பி.,க்கள் பேசுவதற்கு, குறைந்த நேரமே ஒதுக்கப்படும். அ.தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள் என்ற நிலை ஏற்படும் போது, கட்சி குழு என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும். இது போன்ற பின்னடைவு ஏற்படுவதற்கு, மூத்த தலைவர்களின் பேராசையும், சுயநலமும் தான் காரணம் என்ற சலசலப்பு, அக்கட்சியில் உருவாகி உள்ளது.இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:ராஜ்யசபாவில், வைத்திலிங்கத்திற்கு ஒரு ஆண்டு பதவிக்காலம், முனுசாமிக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளது. இதில், ஓராண்டு பதவிக்காலம் உள்ள வைத்திலிங்கத்தின் ராஜினாமா கூட நியாயமானதாக கருதலாம். ஐந்தாண்டு பதவிக்காலம் உள்ள முனுசாமி ராஜினாமாவை தான் ஜீரணிக்க முடியவில்லை.கிடைக்காதுஏற்கனவே, அ.தி.மு.க., - எம்.பி., முகமது ஜான், மார்ச்சில் இறந்து விட்டார். அவருக்கு நான்கு ஆண்டு பதவிக்காலம் இருக்கிறது. அவர் இறந்த ஆறு மாதங்களில், தேர்தல் நடத்த வேண்டும். மேலும், வைத்திலிங்கம், முனுசாமியின் எம்.பி., பதவியும் காலியாக இருப்பதால், இந்த மூன்று இடங்களுக்கும், செப்டம்பர் மாதத்தில் தனித்தனியாக தேர்தல் நடக்க உள்ளது. இந்த மூன்று இடங்களுக்கும், தனித்தனி தேர்தல் என்பதால், சட்டசபையில், 159 எம்.எல்.ஏ.,க்களின் பலம் உள்ள தி.மு.க.,வுக்கு தான், மூன்று இடங்களிலும் வெற்றி கிடைக்கும். அ.தி.மு.க., கூட்டணிக்கு, 75 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், ஒரு எம்.பி., கூட கிடைக்காது என்பது தான் வேதனை.இவ்வாறு அவர்கள் கூறினர். -நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
12-மே-202123:20:39 IST Report Abuse
R chandar Rajya Sabha MP seat is a waste one no need for rajya sabha mp , Elected By people for Lok sabha mp is enough for voicing in lok sabha , rajya sabha mp seat is waste expenditure , better spending money on rajya sabha is waste one instead they can increase the lok sabha seat and make them elected by people of respective state. Money spent on Rajya sabha mp salary, and perks are waste of expenses as those post are elected only by respective state MLA instead of people directly , it makes room for political party to elect member from their party only
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12-மே-202122:07:53 IST Report Abuse
sankaranarayanan ஒழுங்காக நல்ல பெயர் வாங்கித்தந்த மைத்ரேயனுக்கு முதலிலேயே ராஜ்ய சபா போஸ்டு கொடுத்து, அவருக்கு முடிந்துபோன பதவியை நீடித்து இருக்க வைக்காமல், முனுசாமிக்குக்கொடுத்து பாழடித்துவிட்டார்கள். இப்போது தவிறிப்போய், செய்த தவறுக்கு இப்போது கதறி கதறி என்ன பயன்? மைத்ரேயானால் பல சாதனைகள் டெல்லியில் செய்ய முடியும். நல்ல சேவாகும் இருந்த மனிதர். அம்மாவால் பொறுக்கி எடுக்கப்பட்டவர். கட்சிக்கு நல்லதையே செய்தும் காட்டினார். ஒரு முறை துணை முதலாவரூகுக்கூட சந்திக்க நேரம் தாராமல், நிதி அமைச்சர், மைத்த்ரேயனுக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க வைத்தார். அவரை ஆரம்பத்தில் துணை எடுத்துக்கொண்டு சென்ற முத்துசாமி, பாதியிலே பரிதவிக்க விட்டுவிட்டார். இனி சொல்லி எந்த பயனுமில்லை. இவர்களுக்கு ராஜா தந்திரம் முற்றிலும் இல்லை
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
12-மே-202121:49:24 IST Report Abuse
bal இங்கே பதவி வகித்து என்ன கிழிக்க போறாங்க...ஒரு பதவியிலிருக்கும் பொது இன்னொரு பதவிக்கு போட்டி போட்டால் செல்லாது என்று அறிவிக்கவேண்டும்..அதோடு இவர் தொகுதியில் அடுத்தபடியாக அதிக வாக்கு பெற்றவரை பதவிக்கு தகுதியுள்ளவர் என்று அறிவிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X