பொது செய்தி

இந்தியா

பயன்பாட்டிற்கு வருகிறது புதிய கொரோனா மருந்து

Updated : மே 13, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (5+ 30)
Share
Advertisement
புதுடில்லி :பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற பவுடர் வடிவிலான புதிய கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வருகிறது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளதாவது: 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்து
 பயன்பாடு, வருகிறது புது, கொரோனா மருந்து

புதுடில்லி :பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற பவுடர் வடிவிலான புதிய கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வருகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளதாவது: 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்து வெற்றிகரமாக மூன்று கட்ட பரிசோதனைகளைக் கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் இம்மருந்தை வழங்கலாம்.
பாதுகாப்புத் துறையால் கண்டறியப்பட்டுள்ள இம்மருந்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு இரு தினங்களுக்கு முன் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவிலானது. அவசர உதவிக்காக முதற்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்டுகள் மே 11 (நேற்று) அல்லது மே 12, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. மூன்று வாரங்களில் இதன் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும்.


இம்மருந்து வைரசின் உயிரணுக்களில் குவிந்து எதிர்வினையாற்றி மேற்கொண்டு உடலில் வைரஸ் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. இம்மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 51 சதவிகிதத்தினர் 3 நாள்களில் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாள்களில் குணமடைந்தனர். இந்த மருந்தினைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்படாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அகிலேஷ் யாதவ் மற்றும் ராவுல் வின்சியை வாயில் டேப்பை போட்டு ஊமையாக்கவும்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-மே-202115:54:57 IST Report Abuse
Loganathan Kuttuva DRDO Hyderabad comes under ministry of defence.
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
12-மே-202113:09:11 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது குஜராத் கோசாலை மட்டுமன்றி இன்னும் சில குழுவினர் சொல்வதுபோல் இதெல்லாம் கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கு இன்றுவரை அறிவியல்பூர்வமாக எந்தவித ஆதாரமும் இல்லை. சுகாதாரத்துறை வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் பசுவின் சிறுநீருக்கோ கோமியத்துக்கோ பஞ்சகவ்யாவுக்கோ, இப்படி எவ்விதத் திறனும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இருப்பினும், கொரோனா தொற்றுப் பேரிடர் நேரத்தில், இத்தகைய வதந்திகளும் அதுசார்ந்த சிகிச்சைகளும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலாளர்கள் இதை மீண்டும் மீண்டும் மறுத்து வந்தாலும்கூட, மத்திய அரசு, இந்தப் பிரச்னை குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கவோ மக்களின் குழப்பத்தைத் தீர்க்கவோ இதுவரை முனையாமல் இருப்பது அறிவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X