கொரோனாவுக்கு எதிராக 8 மாதங்கள் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ரோம்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.பைசர், மாடர்னா, பயான்டெக், கோவாக்ஸின், கோவிஷீல்டு ஸ்பூட்நிக் 5, சினோவாக் உள்ளிட்ட பல தடுப்பு மருந்துகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் தயாரிக்கப்பட்டு

ரோம்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.



latest tamil news



பைசர், மாடர்னா, பயான்டெக், கோவாக்ஸின், கோவிஷீல்டு ஸ்பூட்நிக் 5, சினோவாக் உள்ளிட்ட பல தடுப்பு மருந்துகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபுறம் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சி விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இத்தாலிய விஞ்ஞானிகள் இதுகுறித்து தற்போது ஒரு உண்மையை கண்டறிந்து உள்ளனர்.


8 மாதங்கள்


கொரோனா வைரஸ் உடலுக்குள் செல்லும்போது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ந்து வைரஸுடன் போராடி வருகிறது. இத்தாலியின் நடத்தப்பட்ட ஆய்வில் இதுகுறித்து கூறிய விஞ்ஞானிகள் வைரசுக்கு எதிராக உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது எட்டு மாதங்களுக்கு உடலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.


latest tamil news



குறிப்பிட்ட ஒரு நோயாளியின் வயது மற்றும் அவரது உடலில் உள்ள நோய்கள் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அனைவருக்குமே எதிர்ப்பு சக்தி தொடர்ந்து எட்டு மாதங்கள் வைரஸ் உடன் போராடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இத்தாலியின் ஐஎஸ்எஸ் நேஷனல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் 162 கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளை ஆய்வு செய்தது. இவர்களது ரத்த மாதிரிகள் இவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வந்தபோதிலும் 8 மாதங்கள்வரை ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகள் நோயாளிகளின் உடலில் இருந்தது இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
12-மே-202114:46:43 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN நோய் எதிர்ப்பு சக்திக்கே உருமாற்றம் அடைந்த (ம்யூட்டண்ட்) வைரஸ் டிமிக்கி கொடுக்கிறதா சொன்னாங்களே ?
Rate this:
Cancel
12-மே-202110:36:55 IST Report Abuse
ஆரூர் ரங் கண்டுபிடித்தே 8 மாதங்கள்தான் ஆகிறது🙄. முழுமையான வாழ்நாள் இனிதான் தெரியும்
Rate this:
Cancel
12-மே-202108:18:29 IST Report Abuse
ஆப்பு போச்சுடா... இனிமே எட்டு மாசத்துக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கச் சொல்லுவாங்க. அப்புறம் ஆயுசு பூரா முகக்கவசம் வேற போடணும்பாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X