அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்பு

Added : மே 12, 2021 | கருத்துகள் (5+ 14)
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும், இன்று பதவிஏற்க உள்ளனர். தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நேற்று பகல், 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என, சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார்.நேற்று காலை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்பாவு; துணை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., -
சபாநாயகர் , அப்பாவு இன்று, பதவியேற்பு

சென்னை:தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும், இன்று பதவிஏற்க உள்ளனர். தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நேற்று பகல், 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என, சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார்.

நேற்று காலை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்பாவு; துணை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி ஆகியோர், சட்டசபை செயலரிடம் மனு தாக்கல் செய்தனர். இருவருடைய மனுக்களையும், முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். சபை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் வழிமொழிந்தார். மனு தாக்கலின் போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு, வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இருவரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி உள்ளது.


latest tamil news



சட்டசபை இன்று காலை, 10:00 மணிக்கு கூடுகிறது. சபை கூடியதும், சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை, தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அறிவிப்பார். அதைத் தொடர்ந்து, முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபை முன்னவர் ஆகியோர் அப்பாவுவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பர். அதன்பின் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசுவர். இறுதியாக சபாநாயகர் ஏற்புரை நிகழ்த்துவார். பின், துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டதாக, சபாநாயகர் அறிவிப்பார்.


18வது நபராக தேர்வு



தமிழக சட்டசபையில், சிவசண்முகம் பிள்ளை, கோபால மேனன், கிருஷ்ண ராவ், செல்லப்பாண்டியன், சி.பா.ஆதித்தனார், கோவிந்தன், மதியழகன், முனுஆதி, ராஜாராம், பி.எச்.பாண்டியன், தமிழ்குடிமகன், முத்தையா, பிடி.ஆர்.பழனிவேல் ராஜன், காளிமுத்து, ஆவுடையப்பன், ஜெயகுமார், தனபால் ஆகியோர் சபாநாயகர்களாக இருந்துள்ளனர்.இவர்களில் கோவிந்தன், தனபால் ஆகியோர், இரு முறை சபாநாயகர்களாக இருந்துள்ளனர். தற்போது, 18வது சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்க உள்ளார். அதேபோல, 18வது துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவியேற்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மே-202110:34:30 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு நாளும் விவாதங்களில் தெளிவாக அறிவுப்பூர்வமாக பேசிப் பார்த்ததில்லை. நல்ல உச்சரிப்பு🤔 தெளிவான சிந்தனை கிடையாது. சாதி அடிப்படையில் தேர்வு நல்லதுக்கில்லை
Rate this:
Cancel
12-மே-202110:04:23 IST Report Abuse
சுடலை மாடசாமி இனிமேல் தொலைக்காட்சி விவாதங்களுக்கு வர மாட்டார்.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
12-மே-202109:37:50 IST Report Abuse
Amal Anandan அவர் செயலே பதில் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X