இது உங்கள் இடம்: ஓப்பனிங் நல்லா இருக்கு!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: 'ஓப்பனிங்' நல்லா இருக்கு!

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (110)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:மு.கல்யாணசுந்தரம், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த ஒரு நிலையிலும் அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. மதுரவாயலில், 'அம்மா' உணவகம், தி.மு.க.,வினரால்
MK Stalin, CM Stalin, Stalin, DMK


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


மு.கல்யாணசுந்தரம், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த ஒரு நிலையிலும் அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. மதுரவாயலில், 'அம்மா' உணவகம், தி.மு.க.,வினரால் சேதப்படுத்தப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில், அது சரி செய்யப்பட்டது மட்டுமில்லாமல், கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதற்கு முன், தமிழகத்தின் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்த பின் தான், அக்கட்சியினர், அமைச்சர் பதவி ஏற்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில், காலில் விழும் கொடுமை நடக்காதது, மக்களை வியப்படைய செய்தது.


latest tamil news



தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற காலதாமதம் செய்யாமல், ஐந்து திட்டங்களுக்கு, முதல்வர் கையெழுத்திட்டு இருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசின் முக்கிய பொறுப்புகளுக்கு, திறமையான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து இருப்பதும் பாராட்டுகளை பெற்றுள்ளது.முதல்வர் ஸ்டாலின் முன் நிற்கும் மிகப்பெரிய பொறுப்பு, கொரோனா பரவலை தடுப்பது. அதற்கு அவர் கடுமை காட்ட வேண்டும்.

கட்சி விழாவின் போது, ஒரு தொகுதிக்கு 1,000 மரக்கன்றுகளை நட உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுதும் இரண்டு லட்சத்திற்கும் மேல் மரக்கன்று நட்டால், ஐந்து ஆண்டுகளில் அவை வளர்ந்து, கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் பெற்று தரும். ஸ்டாலின், முதல்வர் பயணத்தை சிறப்பாகவே ஆரம்பித்து இருக்கிறார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X