பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனை; 'டெண்டர்' நடைமுறை துவக்கம்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மதுரை : மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, டெண்டர் நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. மருத்துவமனை கட்ட, 2019 ஜன., 27ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.முதலில், '45 மாதங்களில்
AIIMS,Madurai,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை,மதுரை

மதுரை : மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, டெண்டர் நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. மருத்துவமனை கட்ட, 2019 ஜன., 27ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.முதலில், '45 மாதங்களில் இம்மருத்துவமனை கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும்' என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 27 மாதங்கள் கடந்த நிலையிலும், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கட்டுமான பணி துவங்கவில்லை.

எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம், கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சமூக ஆர்வலர் பாண்டியராஜா எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த பதில்:


latest tamil newsஎய்ம்ஸ் கட்டுமான பணிக்கான கடன் ஒப்பந்தம், 2021 மார்ச் 26ல், இந்தியா - ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. கடன் தொகை, 1,536.91 கோடி. தற்போது, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்ட மதிப்பீடு, 1,264 கோடி. திட்ட மதிப்பீடு உயரும் வாய்ப்பு உள்ளது. இத்திட்ட மதிப்பீடு உயர்வு, அரசின் பரிசீலனையில் உள்ளது. மருத்துவமனை கட்ட, டெண்டர் நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் பணிகளை விரைந்து முடித்து, கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்து, கட்டுமான பணிகளை விரைந்து துவங்க வேண்டும். 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையில், 100 எம்.பி.பி.எஸ்., 60 நர்சிங் இடங்கள் கிடைக்கும்.எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தற்காலிக கட்டடங்களை தேர்வு செய்து, மருத்துவ மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Kumbakonam,இந்தியா
12-மே-202111:17:58 IST Report Abuse
Siva இப்போதான் டெண்டர் விடவே யோசித்திருக்கிறீர்களா? 27 மாதங்களோ கோரானா எங்க இருந்துச்சு. உதயநிதி சொன்னது சரிதான். திமுக வந்து கேட்டாத்தான் வேலையே ஆகும் போலிருக்கிறது.
Rate this:
Cancel
12-மே-202110:30:02 IST Report Abuse
ஆரூர் ரங் கூவம் மணக்கும் போது எய்ம்ஸ் திட்டம் முடிவடையும். 😁 ஜப்பான் துணை😉 பிரதமர் இருந்தா எல்லாம் நடக்கும்
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
12-மே-202108:17:03 IST Report Abuse
kosu moolai தன் நாட்டுடைமை மூத்த பிரதம மந்திரியிடமிருந்து பணம் பெற உதவி பிரதமருக்கு எந்த வித கஷ்டங்களும் இருக்காது. மேலும் தமிழகத்திற்க்கு சிதம்பரம் ஐயாவை விட மெத்த படித்தவர் நிதியமைச்சராக இருப்பது கூடுதல் பாக்கியம். ஸ்கெட்ச் போட்டு வேலைய ஆரம்பிப்பாங்க கவலையே வேண்டாம்.
Rate this:
12-மே-202109:57:37 IST Report Abuse
Deivaprakasamஎதனால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி தாமதமாகிறது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாத போது மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள். உலகமே இக்கட்டான கொடிய கொரானா நோயின் தாக்கத்தால் அவதிக்கு உள்ளான சூழ்நிலையில் இந்த பணி தாமாதமாவது இயல்பே...
Rate this:
Vinay - Toronto,கனடா
12-மே-202123:58:28 IST Report Abuse
Vinayசென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட் மட்டும் வேகமா நடக்குதே அது எப்டின்னே???......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X