பொது செய்தி

தமிழ்நாடு

பால் விலை குறைப்பால் ரூ.270 கோடி இழப்பு

Added : மே 12, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
பால் லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பால், ஆவின் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு, 270 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். இதனால், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் மானியம் வழங்க, பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலர் முகமது அலி கூறியதாவது:தமிழகத்தில், 17 ஆவின் ஒன்றியங்கள் செயல்பட்டு வந்த நிலையில், ஜனவரி முதல், 25 ஒன்றியங்களாக
Aavin, Aavin milk, Price Revises

பால் லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பால், ஆவின் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு, 270 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். இதனால், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் மானியம் வழங்க, பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலர் முகமது அலி கூறியதாவது:தமிழகத்தில், 17 ஆவின் ஒன்றியங்கள் செயல்பட்டு வந்த நிலையில், ஜனவரி முதல், 25 ஒன்றியங்களாக அதிகரிக்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில், ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வரை, ஆவின் நிறுவனத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

பால் பவுடர் உள்ளிட்ட உப பொருட்கள், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேக்கம் அடைந்துள்ள நிலையில், உற்பத்தியாளர்களுக்கு, ஒன்றியங்கள், 500 கோடி ரூபாய் வரை, பால் பணத்தை நிலுவை வைத்துள்ளன.அரசு அறிவித்தபடி, வரும் 16ம் தேதி முதல், ஆவின் பால் லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்படுகிறது.


latest tamil news



ஆவின் தினமும், 25 லட்சம் லிட்டர் பாலை விற்று வரும் நிலையில், விலை குறைப்பால், தினமும், 75 லட்சம், மாதம், 22.50 கோடி, ஆண்டுக்கு, 270 கோடி ரூபாய் வரை, இழப்பு ஏற்படும். இது, ஆவின் நிர்வாகத்தை, 'திவால்' நிலைக்கு எடுத்துச் சென்று விடும். அதனால், ஆவின் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வரை, அரசு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesha - tamilnadu,இந்தியா
12-மே-202116:04:59 IST Report Abuse
ganesha பேஷ் பேஷ் ஆரம்பமே ரொம்ப நன்னா இருக்கு.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
12-மே-202114:53:25 IST Report Abuse
raghavan சும்மா கதை விடாதீர்கள். பால் விலையை குறைத்தாலும் அதிலிருந்து தயாராகும் வெண்ணை, நெய் , பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமூன், ஐஸ்க்ரீம் விலைகளை உயர்த்தி சரிகட்டி விடுவார்கள்.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
12-மே-202113:42:39 IST Report Abuse
Gnanam கன்றுக்குட்டிகளுக்குரிய பால் மனிதர்களால் அபகரிக்கப்படுகிறது. மனித உடலுக்கு இந்த மிருக கொழுப்பு அடங்கிய பால் தேவைதானா என்பதை ஆய்வு செய்து அறிவுறுத்தவேண்டும். மிருகங்களின் பாலை அருந்துவதால் மனிதத்தன்மை மாறுபடும் என்ற கோணத்தில் ஆய்வு செய்யவேண்டும். மிருக பாலுக்கு மாறாக பனை, தென்னை போன்ற மரங்களின் பதநீர் மனித உடலுக்கு அமிர்தமாக அமையும் என்பது எனது கருத்து. ஆய்வாளர்கள் கவனிக்கவும். நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X