பொது செய்தி

தமிழ்நாடு

ஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை: அர்ஜுன் சம்பத்

Added : மே 12, 2021 | கருத்துகள் (99)
Share
Advertisement
சென்னை : 'சைவ மடாதிபதிகள், ஆதினங்கள், வைணவ ஜீயர்களை சம்பந்தப்பட்ட மடங்களும், ஆதினங்களும், குரு பீடங்களும் நியமனம் செய்து கொள்ளும். இதில் அரசுக்கோ அறநிலைய துறைக்கோ எவ்வித உரிமையும் இல்லை' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: வைணவத்தின் முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் கோயிலின் ஸ்தலத்தார்களாக இருக்கும் ஆச்சார்ய புருஷர்களை இம்மி
ஜீயர், ஹிந்து மக்கள் கட்சி, அர்ஜுன் சம்பத்

சென்னை : 'சைவ மடாதிபதிகள், ஆதினங்கள், வைணவ ஜீயர்களை சம்பந்தப்பட்ட மடங்களும், ஆதினங்களும், குரு பீடங்களும் நியமனம் செய்து கொள்ளும். இதில் அரசுக்கோ அறநிலைய துறைக்கோ எவ்வித உரிமையும் இல்லை' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: வைணவத்தின் முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் கோயிலின் ஸ்தலத்தார்களாக இருக்கும் ஆச்சார்ய புருஷர்களை இம்மி அளவு கூட அறநிலைய துறை மதிப்பதில்லை. கோயிலின் பாரம்பரிய வழக்கத்தை மாற்றி ஸ்ரீ ஜீயர் சுவாமிகளை தாங்களே நியமிக்கும் உரிமையை அறநிலைய துறை எடுத்து உள்ளது.

ஜீயர் சுவாமிகளை 1100ம் ஆண்டில் இருந்து 1989 வரை கோயில் ஸ்தலத்தார்களே நியமித்து வந்துள்ளனர். ஹிந்து விரோத அறநிலைய துறையோடு கைகோர்த்து கோயில் நிர்வாகமே ஜீயர் சுவாமிகளை தேர்ந்தெடுப்பது தர்மத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமானது. எம் பெருமானார் ஸ்ரீராமானுஜர் வகுத்த நெறிமுறைகளுக்கு எதிரானது. அரசு எப்படி ஒரு சமய தலைவரை நியமனம் செய்ய முடியும்; இது என்ன அரசு பணிக்கா ஆள் எடுக்கின்றனர்; இப்படி விளம்பரம் செய்வதற்கு.

ஆன்மிக குருமார்கள் ஆன்மிக குரு பரம்பரை வழியிலேயே பாரம்பரிய முறைப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருகிற சமய நெறிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். இதை நாம் விட்டு விட்டால் நம் கோயிலின் உரிமை நம்மை விட்டு பறிபோய் விடும். அறநிலைய துறையின் அராஜக சட்ட விரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.


latest tamil news



எனவே உடனடியாக இந்த விளம்பரத்தை வாபஸ் பெற வேண்டும். ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகளை பாரம்பரிய முறைப்படி தேர்ந்தெடுத்து நியமனம் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சைவ மடாதிபதிகள், ஆதினங்கள் பீடாதிபதிகள், வைணவ ஜீயர்கள் ஆகியோரை சம்பந்தப்பட்ட திரு மடங்களும் ஆதினங்களும் குரு பீடங்களும் தங்களது பாரம்பரிய முறைப்படி அவர்களே நியமனம் செய்து கொள்ள உரிமை உண்டு.

இதில் அரசுக்கோ அறநிலைய துறைக்கோ எவ்வித உரிமையும் இல்லை. இதுதொடர்பாக அறநிலைய துறை அமைச்சர், முதல்வர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை புகார் மனுக்களை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
13-மே-202107:18:23 IST Report Abuse
Palanivelu Kandasamy முந்தைய ஜீயர் போய் மூன்று வருடம் ஆகிவிட்டது. இன்றுவரை ஏன் அடுத்த ஜீயரை தேர்ந்தெடுக்கவில்லை? உள்ளே சிக்கலா?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
13-மே-202112:13:16 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஅது அவங்க இஷ்டம் ஜீயரை அறநிலையத்துறை நியமிக்க ஏதாவது சட்ட அடிப்படையிலான அதிகாரமோ, உரிமையோ இருக்கா? ஜீயரை நியமிக்கும் அறநிலையத்துறை அனைத்து சாதி அர்ச்சகர்களும் இனி அரசு ஊழியர்கள் என்று அறிவிக்க தயாரா ?...
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
12-மே-202115:34:26 IST Report Abuse
krish தமிழக முதலமைச்சரை, மத்திய அரசு அல்லது கவர்னர், ஜனாதிபதி நியமிப்பது போல் உள்ளது இந்த நடவடிக்கை.
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
12-மே-202115:30:35 IST Report Abuse
Srinivas.... சம்பத்து....நீ அறிவுரை சொல்லவேண்டியவனுங்க போயிட்டானுங்க. மக்கள் அவனுங்க கும்பலை அடித்து விரட்டிட்டாங்க. உன் கும்பலோட போலி வேஷம் இனிமேல் தமிழக இந்துக்களிடம் செல்லாது. நீ வேணும்னா ஒன்னு செய்...ஒரு அட்டை வேலை எடுத்துக்கொண்டு ஊர் ஊரா போய்வா...செய்த பாவம் கொஞ்சம் குறையும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X