புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து தீவிரமாக பங்காற்றும் விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், தேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனை மற்றும் பங்களிப்புகள் போற்றப்படுகின்றன. இதையொட்டி, கொரோனாவுக்கு எதிராக போராடும் விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது, 'டுவிட்டர்' பதிவு: இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலிமையை வெளிப்படுத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனையை பெருமையுடன் நினைவில் கொள்கிறோம். விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களின் கடின உழைப்புக்கு வணக்கம் செலுத்துகிறோம். கொரோனாவை எதிர்க்கும் போராட்டத்தில், அவர்கள் தீவிரமாக பணியாற்றுகின்றனர். அவர்களின் மன உறுதியை பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE