சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாக அதிகரிப்பு| Dinamalar

சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாக அதிகரிப்பு

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (9) | |
பீஜிங் :நம் அண்டை நாடான சீனாவின் மக்கள் தொகை, 141.12 கோடியாக அதிகரித்துள்ளது.ஏழாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரத்தை, சீனா நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவின் மக்கள் தொகை 2019ல், 140 கோடியாக இருந்தது. இது 2020ல், 0.53 சதவீதம் உயர்ந்து, 141.12 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், 60 வயதிற்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 18.7 சதவீதம் அதிகரித்து, 26.40 கோடியாக
China, Population Growth, Slow

பீஜிங் :நம் அண்டை நாடான சீனாவின் மக்கள் தொகை, 141.12 கோடியாக அதிகரித்துள்ளது.

ஏழாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரத்தை, சீனா நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவின் மக்கள் தொகை 2019ல், 140 கோடியாக இருந்தது. இது 2020ல், 0.53 சதவீதம் உயர்ந்து, 141.12 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், 60 வயதிற்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 18.7 சதவீதம் அதிகரித்து, 26.40 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் 15 - 59 வயதுள்ளோர் எண்ணிக்கை 6.79 சதவீதம் சரிவடைந்து, 89.40 கோடியாக குறைந்துள்ளது.

முதியவர்கள் பெருகி இளைஞர்கள் குறைவது, நீண்ட கால அடிப்படையில் சீரான மக்கள் தொகை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். மதிப்பீட்டு காலத்தில் சீனாவில் பிறப்பு விகிதமும், 22 சதவீதம் சரிவடைந்து, 1.46 கோடியில் இருந்து, 1.20 கோடியாக குறைந்துள்ளது. அதுபோல 100 பெண்களுக்கு, 105.20 ஆண்கள் என்ற விகிதம், 105.07 ஆக சரிவடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டு முதல் குறையும் என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1985ல் அறிமுகப்படுத்தப்பட்ட, 'நாம் இருவர், நமக்கு ஒருவர்' திட்டம் காரணமாக சீனாவில் மக்கள் தொகை குறைந்தது. இதனால் கவலை அடைந்த அரசு 2016ல், அத்திட்டத்தை ரத்து செய்து, 'நாம் இருவர், நமக்கு இருவர்' திட்டத்தை அமல்படுத்தியது. எனினும், சீன அரசின் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக, இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே உள்ளது.

சீனாவில் 2025ம் ஆண்டுக்கு பின், மக்கள் தொகை வளர்ச்சி இருக்காது எனக் கூறப்படுகிறது. வரும் 2050ல், அமெரிக்காவை விட முதியோர் பராமரிப்பு அதிகமாகவும், பணி செய்யும் ஆற்றல் உள்ள இளையோரின் பங்கு குறைவாகவும் இருக்கும் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. இதையொட்டி சீன அரசு, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய கொள்கைகளை உருவாக்கி வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X