பொது செய்தி

தமிழ்நாடு

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கை வழி சிகிச்சை: டாக்டர் ரவி

Added : மே 12, 2021
Share
Advertisement
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கை வழி சிகிச்சை சிறந்தது என கடலுார் தி சுசான்லி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. ஆரோக்கியத்தை முழுமைப்படுத்தி நோய் எதிர்பாற்றலை அதிகரித்துக் கொள்ள இயற்கை பல வழிமுறைகளை வழங்கியுள்ளது.நாம் இன்னும் அந்த வழிமுறைகளை சரியாக

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கை வழி சிகிச்சை சிறந்தது என கடலுார் தி சுசான்லி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. ஆரோக்கியத்தை முழுமைப்படுத்தி நோய் எதிர்பாற்றலை அதிகரித்துக் கொள்ள இயற்கை பல வழிமுறைகளை வழங்கியுள்ளது.நாம் இன்னும் அந்த வழிமுறைகளை சரியாக பயன்படுத்தவில்லை. எங்களின் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பல ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம்.அதில், 90 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெற்றது.

இதற்கு காரணம் இயற்கை வழிமுறை சிகிச்சைதான். ஆரோக்கியமான வாழ்வை ஆடம்பரமாக தேடினால் நிச்சயம் கிடைக்காது.சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்துகளை தயாரிக்கும் எங்களின் நிறுவனங்கள் மூலமாக 750க்கும் மேற்பட்ட மருந்துகள், மூலிகை, உணவுப் பொருட்களை தயாரிக்கின்றோம்.ஒவ்வொரு மூலப்பொருளும் சரியாக தரம் பார்த்து சுத்தம் செய்து பாரம்பரிய முறை மாறாமல் இன்றைய நவீன அறிவியல் ஆய்வின் துணையுடன் தயாரிக்கின்றோம்.

கபசுர குடிநீரை சரியான மூலிகைகளை கலந்து திரவ வடிவில் தயாரித்துள்ளோம்.நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகள், அரசு வழிகாட்டுதலை சரியாக கடைபிடித்தல், மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X