பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலையில் துணைவேந்தர் பதவிக்கு போட்டி

Added : மே 12, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக் காலம் விரைவில் முடிவடைய இருப்பதால், அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டல் வந்தது. அதன் பிறகு, முதல் துணைவேந்தராக மணியன் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட முருகேசனின் பதவிக்காலம் வரும் ஜூன் 2ம்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக் காலம் விரைவில் முடிவடைய இருப்பதால், அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டல் வந்தது. அதன் பிறகு, முதல் துணைவேந்தராக மணியன் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட முருகேசனின் பதவிக்காலம் வரும் ஜூன் 2ம் தேதியுடன் முடிகிறது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அதில், அமைப்பாளராக டில்லி இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ், உறுப்பினர்களாக திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலைசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களை இந்த கமிட்டி தேர்வு செய்யும். அதிலிருந்து மூவரை தேர்வு செய்து, தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கும். அதில் ஒருவர், துணைவேந்தராக நியமிக்கப்படுவார்.துணைவேந்தர் பதவியைப் பிடிக்க, பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள் பதிவாளர்கள், துறை தலைவர்கள் பலர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X