இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்; கேரள பெண் உள்ளிட்ட 33 பேர் பலி

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
காசா சிட்டி: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில், 33 பேர் பலியாயினர். இதில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் இறந்ததை மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது.முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் யூதர்களின் புனித இடமாக இஸ்ரேல் கருதப்படுகிறது. தலைநகர் ஜெருசலேமிற்கு, மூன்று மதத்தினரும் உரிமை கோரி வருகின்றனர். இதனால், அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே
 Israel, rocket attack, Hamas, Kerala woman, death

காசா சிட்டி: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில், 33 பேர் பலியாயினர். இதில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் இறந்ததை மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் யூதர்களின் புனித இடமாக இஸ்ரேல் கருதப்படுகிறது. தலைநகர் ஜெருசலேமிற்கு, மூன்று மதத்தினரும் உரிமை கோரி வருகின்றனர். இதனால், அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது. எல்லையில் உள்ள காசா மலைக்குன்று பகுதியில், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும். தற்போது இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உட்பட, 24 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்படும், 13 மாடி கட்டடமான காசா டவரை, இஸ்ரேல் தரைமட்டமாக்கியது.


latest tamil news


இதற்கு பதிலடி தரும்விதமாக, ஹமாஸ் அமைப்பு சுமார் 200 ராக்கெட்டுகளை இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவின. இத்தாக்குதலில் வாகனங்கள், வீடுகள், கட்டடங்கள் என பலவும் தீக்கிரையாயின. இதில் 3 பெண்கள் உட்பட 33 பேர் பலியாயினர். பலியான பெண்களில், இந்தியாவை சேர்ந்த நர்ஸ் சவுமியாவும் ஒருவர். இவர், கேரள மாநிலம் இடுக்கி, கஞ்ச்குஷி பஞ்சாயத்தை சேர்ந்தவர். தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது, ராக்கெட் தாக்குதலில் அவர் பலியாகினார். இதனை உறுதி செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன், தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
15-மே-202109:56:54 IST Report Abuse
meenakshisundaram islaamia theeverivaadhathirkku israel sariyaana thanadanai kodukkiradhu kodukkum
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-மே-202110:21:10 IST Report Abuse
Malick Raja நம்நாட்டில் கொரோனா கட்டுப்பாடற்று கிடப்பது பற்றி வாசகர்கள் ஆலோசனை செய்யலாம் ..
Rate this:
Cancel
RK -  ( Posted via: Dinamalar Android App )
12-மே-202120:39:45 IST Report Abuse
RK காசா இனி இஸ்ரேல் வசம் போகும். முழுவதும் இஸ்ரேல் வசம்... இந்தியாவின் நண்பன் இஸ்ரேல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X