பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது?

Added : மே 12, 2021 | கருத்துகள் (108)
Share
Advertisement
சென்னை : பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்ததால், வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.தேர்தலில், தி.மு.க., வெற்றிபெற்று, தனி
Petrol, Diesel, CM Stalin, Stalin, DMK

சென்னை : பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்ததால், வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில், தி.மு.க., வெற்றிபெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது; அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.அவர் அளித்த வாக்குறுதிப்படி, கொரோனா பாதிப்பு கால நிவாரணமாக, அரிசி கார்டுதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்குவது, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்டவை அமலுக்குவந்தன. பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக, தமிழக அரசுக்கு, லிட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாய்; டீசலுக்கு 15 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.


latest tamil news



தமிழகத்தில், இன்று லிட்டர் பெட்ரோல் விலை, 93.84 ரூபாய்; டீசல், 87.49 ரூபாயாக உள்ளது. அதனால், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்; டீசல் 4 ரூபாய் விலை குறைப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு, வாகன ஓட்டிகளிடம் எழுந்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202105:06:35 IST Report Abuse
ஆப்பு பெட்ரோல் விலையை லிட்டர் 200 ரூவாயாக்கிடணும். அப்போதான் ஊர் சுற்றுபவர்கள் குறைவார்கள்.
Rate this:
Cancel
12-மே-202119:47:24 IST Report Abuse
ஆப்பு நீதிமன்றம் தானாக இந்த வாக்குறுதியை நிறைவேத்தும்படி உத்தரவிடலாமே...
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
12-மே-202118:21:39 IST Report Abuse
Poongavoor Raghupathy ஸ்டாலின் எல்லா பண வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துவிட்டார். பல லக்ஷம் கடனுடன் ஸ்டாலின் பணத்தை வாரி கொடுக்க வரும்படிக்கு எங்கே போவார். வரும்படி இல்லாமல் செலவே என்றால் ஆட்சி எப்படி செய்ய முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X