பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மதிப்பதில்லை; மக்கள் அலட்சியத்தால் அபாய கட்டத்தில் கோவை!

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
கோவை: கோவையில், கொரோனா கோர தாண்டவம் ஆடத்துவங்கி விட்டது. உயிரிழப்புகள் அதிகமாகும் நிலை உள்ளதால் அனைத்து மின் மயானங்களையும் தயார்படுத்தி வைத்திருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.கோவை நகர சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் இரைச்சல் தொடர்ச்சியாக கேட்கிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி ஆம்புலன்ஸ்கள் மணிக்கணக்கில் நோயாளிகளுடன் காத்திருக்கின்றன. அரசு மற்றும்
ஊரடங்கை மதிப்பதில்லை, மயானங்கள்,  அதிகாரிகள், மக்கள், அலட்சியம், அபாயம், கோவை

கோவை: கோவையில், கொரோனா கோர தாண்டவம் ஆடத்துவங்கி விட்டது. உயிரிழப்புகள் அதிகமாகும் நிலை உள்ளதால் அனைத்து மின் மயானங்களையும் தயார்படுத்தி வைத்திருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.

கோவை நகர சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் இரைச்சல் தொடர்ச்சியாக கேட்கிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி ஆம்புலன்ஸ்கள் மணிக்கணக்கில் நோயாளிகளுடன் காத்திருக்கின்றன. அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டாலோ அல்லது உயிரிழந்தால் மட்டுமே படுக்கை காலியாகிறது. மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி, பெரும்பாலான மருத்துவமனைகளில் காலி இல்லை. உயிருக்கு போராடிக் கொண்டிருப்போருக்கு செலுத்தப்படும், 'ரெம்டெசிவிர்' மருந்தும் தட்டுப்பாடாகவே இருக்கிறது. அதையும் முன்கூட்டியே டோக்கன் பெற்று, க்யூவில் மணிக்கணக்கில் காத்திருந்து, வாங்க வேண்டியிருக்கிறது. நெருக்கடியான சூழலில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மயானங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.


அலட்சியத்தால் ஆபத்து


கோவை மாநகராட்சி எல்லைக்குள், 10 இடங்களில் மின் மயானங்கள் இருக்கின்றன. இவை அனைத்திலும், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் சடலங்களை எரியூட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மயானத்திலும் நாளொன்றுக்கு எத்தனை சடலங்கள் எரியூட்டப்படும் என்கிற விவரம் கேட்டறியப்பட்டு, இரவு, 8:00 மணி வரை செயல்பட்டு, காத்திருக்க வைக்காமல், உடனடியாக எரியூட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ துறையினர் கூறியதாவது:தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதும், யாரும் மதித்து நடப்பதாக தெரியவில்லை. பகல் 12 மணி வரையிலான கட்டுப்பாடு தளர்வுகள் பெரும் அபாயத்துக்கு வழிவகுக்கும்; இது வாபஸ் பெறப்பட வேண்டும். அத்தியாவசிய துறைகள் மற்றும் மருத்துவத்துறைகள் மட்டுமே இயங்க வேண்டும். மக்கள் யாருமே வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. கடுமையான நடவடிக்கை மட்டுமே நோய் பரவல், உயிரிழப்புகளை தடுக்கும்.


'பளு அதிகரித்திருக்கிறது'


கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:கோவை மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக, கோவை நோக்கி வருவோர் அதிகரித்துள்ளனர். பெங்களூருவில் இருந்து கூட, படுக்கை வசதி கேட்டு, அழைப்புகள் வருகின்றன. அதனால், பளு அதிகரித்திருக்கிறது. யாரையும் வர வேண்டாம் என சொல்ல முடியாது. உயிரிழப்போரில், 60-70 சதவீதத்தினர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். அச்சடலத்தை, அம்மாவட்டங்களுக்கு உறவினர்களிடம் கொடுத்து அனுப்புவது 'ரிஸ்க்'. அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சடலங்கள் தேங்குவதாக தகவல் வந்ததால், மயானங்கள் எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகின்றன என்பதை ஆய்வு செய்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.


மயானத்துக்கு 6 உடல்கள்


கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் உடல்களை, உறவினர்கள் முன்னிலையில், விதிமுறைக்கு உட்பட்டு எரியூட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம், உடல்கள் தேக்கம் அடையாமல் இருக்க, அனைத்து மயானங்களுக்கும் சமமாக பிரித்து வழங்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லைக்குள், 10 மின் மயானங்கள் இருப்பதால், ஒவ்வொன்றுக்கும் தலா, ஆறு சடலங்கள் வீதம் பிரித்து அனுப்ப, சவக்கிடங்கு பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


வேண்டாமே அலட்சியம்


தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் படுக்கை இல்லாத காரணத்தினால், நோயாளிகளை அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால், அங்கும் படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் படுகைககளுக்காக பெயர்களை பதிவு செய்து, ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; மருத்துவமனை நிர்வாகம் நெருக்கடி தாளாமல் திணறி வருகிறது.


latest tamil news


கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், '' நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.; மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். இருப்பினும், நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை,'' என்றார்.


இன்னும் விபரீதமாகும்!


கோவை மருத்துவமனைகளில், படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் தவிக்கும் நிலையை நேரிலும் ஊடகங்கள் வாயிலாகவும் பொது மக்கள் பார்வையிடுகின்றனர். ஆனாலும், முழு ஊரடங்கிலும் பலர் இன்னும் தேவையின்றி ஊர் சுற்றுகின்றனர். கடைகளில் கூட்டமாக நிற்கின்றனர். கடந்த முறையை போல், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுப்படுத்த முடியும். தவறினால், நிலைமை இன்னும் விபரீதமாகும்.


அமைச்சர்கள் எங்கே?


கோவை மாவட்டத்தில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த, அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோரை, முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அவ்விருவரும், இன்னும் கோவை பக்கம் எட்டிப்பார்க்காமல் இருக்கின்றனர்.


என்ன செய்யப் போகிறார் வேலுமணி?


தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளையும் அ.தி.மு.க., பெற்றுள்ளது.வேலுமணி, முந்தைய ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கொரோனா பரவல் தடுக்க, பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அதிகாரிகள் கூட்டத்தை அடிக்கடி கூட்டி, அறிவுரை வழங்கி, பணிகளை முடுக்கி விட்டார். தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதால், எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஒதுங்கி நிற்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இனியாவது, 10 எம்.எல்.ஏ.,க்களும் களமிறங்கி, கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற, பணியாற்ற வேண்டும்; செய்வார்களா?

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalaiselvam - tiruppur,இந்தியா
13-மே-202107:01:37 IST Report Abuse
kalaiselvam திருப்பூரில் அணைத்து ஏற்றுமதி நிறுவனங்களும் வழக்கம் போல் சமூக இடைவெளி இல்லாமல் இயங்க அனுமதி கொடுத்துவிட்டு இப்போது குத்துதே குடையுதே என்றல் என்ன அர்த்தம். வேலைக்கு போறவன் போய்கிட்டுதான் இருப்பான். சாலையில் கூட்டநெரிசல் இருக்கத்தான் செய்யும். கண்டிப்பான தெளிவான கொள்கை இல்லாமல் சில முதலாளிகளுக்காக கொரனவை அரசு செலவில் அரசு பரப்புகிறது. இதுதான் உண்மை. முதலாளிகளுக்கும் பாதிப்பு இல்லை. அரசுக்கும் பாதிப்பு இல்லை. குறிப்பு :- இனிமேல் திருப்பூரில் ஊரடங்கு போட்டுவிடாதீர்கள். ஏனென்றால் ஊர் செல்ல பேருந்தும் இல்லை. வேலையில்லாமல் சாப்பிட கையில் பணமும் இல்லை. பாவம் டி கடைகாரனும் நான்களும்தான்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-மே-202117:56:25 IST Report Abuse
Malick Raja மக்கள் அறிவிழந்து தன்னிலை அறியாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது என்று சொல்வது அனைவர்க்கும் எளிது ஆனால் .. இதற்கெல்லாம் காரணம் வறுமை என்பதை மறுக்கவே முடியாது .. கொரோனாவால் சாகாவிட்டாலும் வறுமையிலா சாகவேண்டும் என்று பிழைப்பு தேடி வெளிவருபர்களும் இருப்பதை மறுக்கமுடியாது .. ஆக கொரோனா ஒரு புறம் வாழ்வாதாரம் மறுபுறம் .. இரண்டையும் நிதானித்து உரியதை அரசுகள் செய்யலாம் . பெருவதற்கும் பீத்திக்கொள்வதற்கும் ஒரு கூடர் உண்டு .. வாயால் வடைசுடும்வள்ளவர்கள் ..ஒடி ஒளிந்து விடுவார்கள் இதுபோன்ற சமயங்களில் .. நல்லவர்கள் அல்லவா ..
Rate this:
Cancel
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு கோவையில் கரோனா ஆபத்து எல்லை கடந்துவிட்டது .. மோடி அரசின் குறைபாடே கரணம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X