அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் கொரோனாவை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர். இந்த சூழலில்
TamilnaduCM, Stalin, Doctors, CoronaVirus, Relief, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், மருத்துவர், கொரோனா, உயிரிழப்பு,இழப்பீடு

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் கொரோனாவை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர். இந்த சூழலில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளிடம் இருந்து கொரோனா தொற்று பரவி பாதிப்படைந்து வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பலரும் குணமடைந்தாலும், சில மருத்துவர்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்.


latest tamil news


உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பதால், அவர்களுக்கு அவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‛கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். கொரோனா 2ம் அலை பெருந்தொற்று காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத காலத்திற்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்,' என அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
12-மே-202119:52:30 IST Report Abuse
Devanand Louis முன்பு ஒரு கோடி யென்று சொன்னவர் தற்பொழுது வேறு லட்சங்களை மட்டும் கொடுப்போமென்று சொல்லுகிறார் ஸ்டாலின்
Rate this:
Cancel
Azhagan Azhagan - Chennai,இந்தியா
12-மே-202119:31:16 IST Report Abuse
Azhagan Azhagan ஸ்ரீனிவாசன் னு............... ஒரு குடும்ப கொத்தடிமை முட்டு குடுக்க சுத்துவானே............... எங்க இருக்க.........
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
12-மே-202118:27:15 IST Report Abuse
venkates ஒரு கோடி னு ஏமாந்தான் இனிமே பாருங்க ,,, தமிழ்நாட்டுக்கு வாக்காளர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X