பொது செய்தி

இந்தியா

அரபிக் கடலில் 2021ன் முதல் புயல்: கேரளாவை தாக்கவுள்ளது 'தாக்டே'

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: 'நடப்பாண்டின் முதல் புயல் அரபிக் கடலில் வரும் 14ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வரும் 14ம் தேதி காலை தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வடக்கு வடமேற்கு நோக்கி நகரக்கூடும். லட்சத்தீவை

புதுடில்லி: 'நடப்பாண்டின் முதல் புயல் அரபிக் கடலில் வரும் 14ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வரும் 14ம் தேதி காலை தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வடக்கு வடமேற்கு நோக்கி நகரக்கூடும். லட்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் லட்சத்தீவுகள், கடலோர கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும்.


latest tamil news


இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 16ம் தேதி கிழக்கு மத்திய அரபிக் கடலில் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பின் வடக்கு வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும். குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கலாம். தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இதுபற்றி அடுத்த ஓரிரு நாட்களில் உறுதியான தகவல் தெரிந்துவிடும்.

இந்த புயல் உருவாகும் பட்சத்தில் நடப்பாண்டின் முதல் புயலாக கருதப்படும். இதற்கு 'தாக்டே' (Tauktae) என்று பெயரிடப்படும். இப்பெயரை மியான்மர் நாடு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. தாக்டே என்றால் அதிகப்படியான ஒலி எழுப்பும் ஊர்வன என, அர்த்தம்.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivanthi - Nagercoil,இந்தியா
12-மே-202120:19:46 IST Report Abuse
Sivanthi ஏற்கனவே கொரோனா இதுல புயல் வேறயா ?
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-மே-202116:40:01 IST Report Abuse
Loganathan Kuttuva புயல் வெய்யில் காலங்களில் தாக்கினால் தென் மேற்கு பருவ காற்று மிகவும் தாமதமடையும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X