அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவு பதவியேற்பு

Added : மே 12, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும், இன்று (மே 12) பதவியேற்றனர்.தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நேற்று பகல், 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என, சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார். நேற்று காலை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்பாவு; துணை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., -
TN, Assembly Speaker, Appavu, Pichandi, DMK, தமிழகம், சட்டசபை, சபாநாயகர், அப்பாவு, பிச்சாண்டி,

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும், இன்று (மே 12) பதவியேற்றனர்.

தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நேற்று பகல், 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என, சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார். நேற்று காலை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்பாவு; துணை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி ஆகியோர், சட்டசபை செயலரிடம் மனு தாக்கல் செய்தனர். இருவருடைய மனுக்களையும், முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். சபை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் வழிமொழிந்தார். மனு தாக்கலின் போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு, வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இருவரும் போட்டியின்றி தேர்வானார்கள்.


latest tamil news


சட்டசபை இன்று காலை, 10:00 மணிக்கு கூடியது. சபை கூடியதும், சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை, தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபை முன்னவர் ஆகியோர் அப்பாவுவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அதன்பின் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின், துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.


18வது நபராக தேர்வு


latest tamil news


தமிழக சட்டசபையில், சிவசண்முகம் பிள்ளை, கோபால மேனன், கிருஷ்ண ராவ், செல்லப்பாண்டியன், சி.பா.ஆதித்தனார், கோவிந்தன், மதியழகன், முனுஆதி, ராஜாராம், பி.எச்.பாண்டியன், தமிழ்குடிமகன், முத்தையா, பிடி.ஆர்.பழனிவேல் ராஜன், காளிமுத்து, ஆவுடையப்பன், ஜெயகுமார், தனபால் ஆகியோர் சபாநாயகர்களாக இருந்துள்ளனர். இவர்களில் கோவிந்தன், தனபால் ஆகியோர், இரு முறை சபாநாயகர்களாக இருந்துள்ளனர். தற்போது, 18வது சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்றார். அதேபோல, 18வது துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவியேற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-மே-202119:25:14 IST Report Abuse
meenakshisundaram என்னமோப்பா ,தமிழ் நாட்டிலே எதுவுமே இனிமே சரியா இருக்க இடமே இல்ல .தலைவலி தான் .துட்டு வச்சுத்தான் எல்லாமே என்று ஆகிப்போச்சு .இதிலே யாரு சபாநாயகரா இருந்தா என்ன ?இல்லாட்டி என்ன ?மெஜாரிட்டி -சபைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவங்க தான் தைரிய மா நடமாட முடியும்.
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
12-மே-202120:09:52 IST Report Abuse
VELAN S முன்னாடி உள்ள ஒரு தமிழக சட்டசபை தேர்தலில் 233 பேர்களும் கட்சி வழியே எம் எல் எ ஆக , இந்த அப்பாவு மட்டும் ராதாபுரத்திற்கு செய்த நன்மைகளால் சுயேட்சையாக ராதாபுரம் எம் எல் எ ஆனார் . பின்னர் அரசியலில் சுயேட்சையாக காலம் தள்ள முடியாது என தி மு க வில் சேர்ந்தார் . இவர் எம் எல் எ ஆக இருந்த பொது தாமிர வாருணி தண்ணியை ராதபுரத்திற்கு கொண்டு வந்து ராதாபுரம் தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைத்தார் என்பார்கள் . தன்னால் முடிந்ததை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு நல்ல மனிதர் . அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்ததற்கு பாராட்டலாம் . அதே போல பிச்சாண்டிக்கும் ஒரு நல்ல அரசியல் வரலாறு இருக்கும் என்று நினைக்கிறேன்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-மே-202119:16:12 IST Report Abuse
Endrum Indian வாவ் என்ன ஒரு பொருத்தம் சபாநாயகர் அப்பாவி (வு) துணை சபாநாயகர் பிச்சாண்டி???????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X