பொது செய்தி

இந்தியா

2-18 வயதினருக்கு 'கோவாக்சின்': பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையவர்களுக்கு செலுத்தி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையவர்களுக்கு செலுத்தி

புதுடில்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையவர்களுக்கு செலுத்தி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.



latest tamil news


மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையவர்களுக்கு செலுத்தி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ.,) விரிவாக பரிசீலித்து அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.


latest tamil news


எனினும் மூன்றாம் கட்ட பரிசோதனையை தொடங்குவதற்கு முன், இரண்டாம் கட்ட பரிசோதனை குறித்த இடைக்கால தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்துக்கு சி.டி.எஸ்.சி.ஓ., நிபந்தனை விதித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
12-மே-202117:02:35 IST Report Abuse
Sankar Ramu மூன்றாம் கட்ட பரிசோதனையை முடித்து பக்க விளைவுகள் பற்றிய அறிக்கையை உடன் தெரிவிக்கவும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
12-மே-202112:08:13 IST Report Abuse
S. Narayanan 45 வயது வந்தோர் நிறைய பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்துக் கிடககிறார்கள். அப்படி இருக்க மற்றவர்களுக்கும் இப்போது தடுப்பூசி செலுத்துவதன் அர்த்தம் புரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X