இத்தாலியில் இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 6 டோஸ் தடுப்பூசி

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
டஸ்கனி: இத்தாலியில் இளம்பெண் ஒருவருக்கு, ஒரே நேரத்தில் 6 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை கண்காணிப்பில் வைத்திருந்த டாக்டர்கள், எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.இத்தாலியின் டஸ்கனி பகுதியில், 23 வயதான இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சென்றார். அங்கு பைசர்
Italy, corona, vaccination, coronavirus, covid19, Pfizer,  இத்தாலி, இளம்பெண், தடுப்பூசி, பைசர், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19,

டஸ்கனி: இத்தாலியில் இளம்பெண் ஒருவருக்கு, ஒரே நேரத்தில் 6 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை கண்காணிப்பில் வைத்திருந்த டாக்டர்கள், எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.

இத்தாலியின் டஸ்கனி பகுதியில், 23 வயதான இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சென்றார். அங்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வந்தது. பணியில் இருந்த நர்ஸ் ஒருவர், ஒரு குப்பியில் இருந்த 6 டோஸ் மருந்து முழுவதையும் ஒரே ஊசியில் ஏற்றி, அதனை அந்த பெண்ணிற்கு செலுத்தினார். இதன் பின்னரே, தனது தவறு நர்சுக்கு தெரியவந்தது. இதனையறிந்த டாக்டர்கள் தீவிர ஆலோசனை நடத்தி, அந்த பெண்ணை கண்காணிப்பில் வைக்க முடிவு செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர். அதில், அந்த பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


latest tamil newsமருத்துவமனை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அதிகளவு தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட அந்த இளம்பெண் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இந்த பிரச்னை தவறுதலாக நடந்து விட்டது. வேண்டுமென்று நடக்கவில்லை. ஏதேனும் அசவுகர்யம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுகும்படி அந்த பெண் அறிவுறுத்தப்பட்டு உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
13-மே-202100:20:55 IST Report Abuse
Vena Suna அது உடனே தெரியாது ...பிரச்சினை தான்....
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
12-மே-202118:08:33 IST Report Abuse
vnatarajan இத்தாலியில் நடந்த சம்பவத்திற்கும் இந்தியாவில் உள்ள ராகுலுக்கும் என்ன சம்பந்தம் தேவையில்லாமல் ராகுலைப்பற்றி ஏன் காமெண்டடிக்கறாங்கள்
Rate this:
Cancel
Truth Behind - Tamilnadu,இந்தியா
12-மே-202118:07:38 IST Report Abuse
Truth Behind If this happened in India, then our honorable prime minister Modi will be reason.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X